ஃபியட் லீனியாவின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்!
கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஃபியட் லீனியா காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
லீனியா எலிகன்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய காரில் கூடுதல் ஆக்சஸெரீகளும், வசதிகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. சிறப்பம்சங்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஒரே வண்ணத்தில் மட்டும்...
இந்த கார் வெள்ளை நிறத்தில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். ஆனால், வெள்ளை- கருப்பு என இரட்டை வண்ணத்தில் அசத்தலாக இருக்கிறது.

அலங்காரமான மாடல்
முன்பக்க க்ரில், சைடு மிரர்கள், கூரை, பில்லர்களில் கருப்பு நிறம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கரும் பக்கவாட்டில் இருக்கிறது. சைடு மிரரில் க்ரோம் அலங்கார பட்டை ஒன்றும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய அலாய் வீல்
மிரட்டலான முன்பக்க பம்பர், சைடு ஸ்கர்ட்டுகள், 16 இன்ச் அலாய் வீல்கள், ரியர் ஸ்பாய்லர் ஆகியவை வெளிப்புறத்தில் கூடுதல் ஆக்சஸெரீகளாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.

புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
புதிய சீட் கவர்கள், 6.5 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலிகன்ட் பேட்ஜ் கொண்ட மிதியடிகள், புதிய டோர் சில் கார்டு ஆகியவை இன்டிரியரை மிக பிரிமியமாகவும், தனித்துவத்துடன் காண செய்கிறது.

எஞ்சின்
எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. 91 பிஎச்பி பவரை வழங்கும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் மற்றும் 110 பிஎச்பி பவரை அளிக்கும் 1.4 லிட்டர் டி-ஜெட் பெட்ரோல் எஞ்சினுடன் கிடைக்கும்.

விலை விபரம்
ரூ.9.99 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து புதிய ஃபியட் லீனியா எலிகன்ட் எடிசன் விற்பனைக்கு கிடைக்கும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications








