சென்னை மழையால் பாதிக்கபட்ட வாடிக்கையாளர்களுக்கு ஃபியட் உதவுகிறது

Written By:

மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஃபியட் கார் நிறுவனமும்ொ, உதவ முன் வந்துள்ளது.

சமீபத்தில், கடந்த சில வாரங்களாக சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் நீடித்து வந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளதால் ஏராளமான மக்கள் மற்றும் அவர்களது வாகனங்கள் பாதிக்கபட்டது. இதனால் ஏராளமானோரின் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகியது.

ஃபியட் நிறுவனம் அல்லது ஃபியட் க்ரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் என அழைக்கப்படும் ஃபியட் நிறுவனத்தின் சுமார் 300-க்கும் கூடுதலான கார்கள் (சென்னையில் மட்டும்) கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ளதாக தெரிகிறது.

சென்னை வெள்ளத்தில் பாதிக்கபட்ட வாகனங்களுக்கு உதவ ஃபியட் சார்பாக ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றது. ஃபியட் புன்ட்டோ, ஃபியட் லீனியா, ஃபியட் அவென்ச்சுரா மற்றும் ஃபியட் அபார்த் மாடல்களுக்கும் ஃபியட்டின் சேவை வழங்கபட உள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டு, சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கபட்டுள்ள வாகனங்களுக்காக ரோட்சைட் அசிஸ்டன்ஸ் (சாலையோர உதவிகள்) வழங்கபட உள்ளது. இப்படி செய்வதினால், பாதிக்கபட்ட கார்களை சுலபமாக ஒர்க்‌ஷாப்களுக்கு கொண்டு செல்ல முடியும்.

ஃபியட் நிறுவனம், பாதிக்கபட்ட வாகனங்களை சர்வீஸ் செய்ய, சர்வீஸ் செண்டர்கள் வரை இலவசமாக கொண்டு செல்கின்றது என்பது குறிப்பிடதக்கது. இப்படி கொண்டு செல்லபடும் கார்களுக்கு துரிதமான முறையில் சர்வீஸ் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளபடுகின்றது.

ஃபியட் நிறுவன கார்களின் இந்த சர்விஸ் நடவடிக்கைகளை மேற்கொள்ள, ஃபியட் டீலர்ஷிப்களுக்கும், சர்வீஸ் செண்டர்களுக்கும் கூடுதல் அளவிலான சர்வீஸ் செய்யும் டெக்னீஷியன்கள் வழங்கபட உள்ளனர். சென்னை வெள்ளத்தில் பாதிக்கபட்ட கார்களை சர்வீஸ் செய்வதற்காக, அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து ஆட்டோமொபைல் டெக்னீஷியன்கள் சென்னைக்கு தற்காலிகமாக பனியமர்த்தபட உள்ளனர்.

fiat-offers-services-flood-affected-cars-in-chennai

பழுது அடைந்திருக்கும் உதிரி பாகங்களை மாற்ற வேண்டிய நிலை இருந்தால், உதிரி பாகங்களின் செலவை, வாடிக்கையாளர்கள் 50 சதவிகிதம், ஃபியட் நிறுவனம் 50 சதவிகிதம் என்ற அளவில் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளதாக ஃபியட் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், இன்சூரன்ஸ் திட்டம் மூலம் விண்ணப்பித்து நஷ்ட ஈடு பெற்ற கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. இருந்தாலும், வாகனத்தின் அனைத்து பழுதுகளுக்கும் ஆகும் செலவுகளுக்கு நஷ்ட ஈடு பெற முடியாது என்பது தெரிந்த விஷயாக உள்ளது.

எனவே தான், வாடிக்கையாளர்கள் கார்களுக்கான உதிரி பாகங்கள் வாங்க ஆகும் செலவில் பாதி வரை தாங்கள் ஏற்க தயாராக உள்ளதாக ஃபியட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு ஆகும் செலவின் சுமை கட்டாயம் பெரும் அளவு குறையும் என்பது குறிப்பிடதக்கது.

English summary
Fiat is very much ready to offer Services to the Flood Affected Vehicles In Chennai. Fiat also known as Fiat Chrysler Automobiles has come forward to reach out to all their customers in Chennai whose cars got affected in the recent floods. Assistance are offered for all Fiat vehicles including the Punto, Linea, Avventura, and even Abarth models.
Story first published: Sunday, December 13, 2015, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark