ஃபியட் கார்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம் - விபரம்
ஃபியட் கார்களுக்கான சிறப்பு பரிசோதனை முகாம் இன்று துவங்கியது. நாடு முழுவதும் உள்ள ஃபியட் டீலர்களில் வரும் 10ந் தேதி இந்த சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்பட இருக்கிறது.
இந்த சிறப்பு கார் பரிசோதனை முகாமில் பங்கேற்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கப்படும் என்று ஃபியட் தெரிவித்துள்ளது.

இலவச பாடி வாஷ், லேபர் கட்டணத்தில் தள்ளுபடி போன்றவற்றை வாடிக்கையாளர்கள் பெறலாம். மேலும், ஆக்சஸெரீகள் மீது அதிகபட்ச தள்ளுபடிகளையும் வாடிக்கையார்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, ரூ.1,250 மற்றும் ரூ.1,460 விலையில் விற்பனை செய்யப்படும் ஆம்பியன்ட் மற்றும் கோஸ்ட் லைட்டுகளை இந்த சர்வீஸ் முகாம்களில் பங்கேற்பவர்களுக்கு ரூ.999 விலையில் தருவதாக ஃபியட் தெரிவித்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஃபியட் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








