தீபாவளி ஸ்பெஷல்: ஃபியட் புன்ட்டோ ஸ்போர்டிவோ லிமிடெட் எடிஷன் அறிமுகம்

Written By:

ஃபியட் இந்தியா நிறுவனம், தீபாவளியை ஒட்டி ஃபியட் புன்ட்டோ ஸ்போர்டிவோ லிமிடெட் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது.

பண்டிகை காலத்தை ஒட்டி, பல்வேறு நிறுவனங்கள் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ஸ்பெஷல் எடிசன் கார் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், ஃபியட் இந்தியாவும், ஃபியட் புன்ட்டோ ஸ்போர்டிவோ லிமிடெட் எடிஷனை அறிமுகபடுத்தியுள்ளது.

சிறந்த சாய்ஸ்...

சிறந்த சாய்ஸ்...

ஃபியட் புன்ட்டோ ஸ்போர்டிவோ காரின் அறிமுகம் குறித்து, ஃபியட் க்ரைஸ்லர் உயர் அதிகாரி கெவின் ஃப்ளின் மிகுந்த பெருமிதத்தை வெளிபடுத்தினார்.

ஸ்போர்ட்டியான வாகனங்களை தேடும் ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு இது உகந்த வாகனமாக திகழும் என கெவின் கூறினார். பிற ஹேட்ச்பேக் கார்களை காட்டிலும், ஃபியட் புன்ட்டோ ஸ்போர்டிவோ தனித்து விளங்க கூடிய அம்சங்களை கொண்டுள்ளது என கெவின் தெரிவித்தார்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இந்த லிமிடெட் எடிஷன் புண்டோ ஸ்போர்டிவோ கார், ஃபியட்டின் 1.3 லிட்டர் மல்டி-ஜெட் டீசல் இஞ்ஜினை கொண்டது. இதன் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

இந்த காரின் இஞ்ஜின், 75 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 197 என்எம் டார்க்கை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. ஃபியட் புன்ட்டோ ஸ்போர்டிவோ கார், லிட்டருக்கு 21.2 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது என அராய் அமைப்பு மூலம் அங்கீகரிக்கபட்டுள்ளது.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

ஃபியட் புண்டோ ஸ்போர்டிவோ காரில் பிரத்யேகமான இரட்டை வண்ணக் கலவையிலான பெயின்ட்டிங் கொண்டுள்ளது. காரின் மொத்த பாடியும் சிகப்பு நிறத்திலும், அதன் ரூஃப் (கூரை) மட்டும் வெள்ளை நிறத்திலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஹேட்ச்பேக் கார், லிமிடெட் எடிஷன் வகையை சேர்ந்தது என குறிப்பிடும் வகையில், சில டீகேல்களும் கொண்டுள்ளது. ஃபியட் புண்டோ ஸ்போர்டிவோ, வழக்கமான ஃபியட் ஹேட்ச்பேக்கின், ஸ்போர்ட்டியான வடிவமாக திகழ்கிறது.

சிறப்புகள்

சிறப்புகள்

வெளிப்புறத்தை பொருத்த வரை, புதிய ரியர் ஸ்பாய்லர், புதிய 15-இஞ்ச் அல்லாய் சக்கரங்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸார்கள் மற்றும் ஓஆர்விஎம்-ல் குரோம் பூச்சு போன்ற அம்சங்கள் கொண்டுள்ளது.

உட்புற அமைப்பை பொருத்த வரை, 6.5 இஞ்ச் டச்ஸ்க்ரீன் எண்டர்டெய்ன்மண்ட் சிஸ்டம், புதிய சீட் கவர்கள், ஃபியட் பிராண்டிங்-குடன் கூடிய ஸ்பெஷல் மிதியடிகள், ஸ்பெஷல் ஃப்ளாட் டோர் சில்கள் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் உள்ளது.

விலை;

விலை;

ஃபியட் புண்டோ ஸ்போர்டிவோ லிமிடெட் எடிஷன் கார், 7.10 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் கிடைக்கிறது.

முன்னதாக, ஃபியட் நிறுவனம், அபார்த்தின் பிராண்டிங்-குடன் கூடிய அபார்த் புண்டோ மற்றும் அபார்த் அவ்வென்சுரா மாடல் கார்களை அறிமுகம் செய்தது. அபார்த் புண்டோ 9.95 லட்ச ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையிலும், அபார்த் அவ்வென்சுரா 10.01 லட்ச ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் கிடைக்கின்றது.

English summary
Fiat Punto Sportivo Launched at 7.10 Lakh Rupees As Limited Edition Model. Fiat Punto Sportivo limited edition model will be available in a standard option and in limited numbers. Punto Sportivo is launched so that customers can opt for a special version during Diwali.
Story first published: Friday, October 30, 2015, 15:41 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark