ஃபியட் நிறுவனம் நடத்தும் தேசிய அளவிலான இலவச குளிர்கால முகாம்கள்

Written By:

ஃபியட் இந்தியா நிறுவனம் தேசிய அளவிலான இலவச குளிர்கால கார் சர்வீஸ் முகாம்களை நடத்த உள்ளது.

'வின்டர் வெதர் கேம்ப்' என்ற பெயரில் நடத்தபடும் இந்த இலவச சர்வீஸ் முகாம், டிசம்பர் 17 முதல் டிசம்பர் 19. 2015 வரை நடை பெற உள்ளது.

இந்த பிரத்யேக முகாம் தமிழ்நாட்டில் நடத்தபட மாட்டாது. ஏனெனில், சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில், மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கபட்ட கார்களை சரி செய்யும் பணிகளில் ஃபியட் நிறுவனம் மும்முரமாக களம் இறங்கியுள்ளது.

இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள ஃபியட் டீலர்ஷிப்களில் நடைபெறும் இந்த இலவச குளிர்கால முகாம்களின் போது, ஃபியட் கார்களை இன்னல்கள் இல்லாமல் இருப்பதையும், இந்த கடுமையான குளிர்காலங்களை எதிர்கொள்ளும் வகையில் தயார் செய்யபடுகிறது.

இந்த இலவச கேம்ப்களின் போது, டெக்னீஷியன்கள் ஃபியட் வாகனங்களின் இஞ்ஜின், பேட்டரி, டையர்கள், லைட்கள், ஹீட்டிங் மற்றும் வெண்டிலேஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பரிசோதிக்கபட்டு சரி செய்யபடும்.

Fiat Winter Weather check-up Camp Free Nationwide Organized in December

மேலும், இந்த முகாம்களின் போது, லேபர் சார்ஜ்களின் மீதான கட்டணத்திலும், ஏதேனும் உதி பாகங்களை மாற்ற நேரிட்டால், அந்த உதிரி பாகங்களின் மீது 10 % தள்ளுபடி வழங்கபடுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு இந்த இலவச குளிர்கால முகாம்கள் குறித்த தகவல்கள், மெஸ்ஸேஜ் மற்றும் இ-மெயில் மற்றும் சமூக வளைதளங்கள் மூலமாகவும் வழங்கபட்டு வருகின்றது.

English summary
Fiat India is organizing a free nationwide Winter Check-up camp, at their exclusive dealerships. These Winter Check-up camp is held from December 17 - December 19, 2015. This camp is not conducted in Tamil Nadu. Because, there Fiat is focusing on helping out its flood affected customers.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark