எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் குதிக்கும் போர்ஷே!

By Saravana

பிரிமியம் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது மாற்று எரிசக்தியில் இயங்கும் கார் வடிவமைப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், ஃபோக்ஸ்வேகன் குழுமத்தில் அங்கம் வகிக்கும் போர்ஷே நிறுவனமும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்க முடிவு செய்திருக்கிறது.

அந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் தலைவர் இந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார். எலக்ட்ரிக் கார் மட்டுமின்றி, ஹைபிரிட் மற்றும் ஃப்யூவல் செல் எரிசக்தி தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களை தயாரிப்பதற்கும் அதிக முக்கியத்துவம் தந்து வருவதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Porsche Car

பெர்லினில் நடைபெற இருக்கும் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் ஆண்டு கூட்டத்திற்கு முன்னோட்டமாக நடந்த நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக போர்ஷே நிறுவனமும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்க இருக்கும் தகவல் மீடியா கைகளுக்கு சிக்கியிருக்கிறது.

சமீபத்தில்தான் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தில் அங்கம் வகிக்கும் ஆடி கார் நிறுவனம் முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் புதிய பிரிமியம் எஸ்யூவியை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்தது. இந்த நிலையில், போர்ஷே நிறுவனமும் எலக்ட்ரிக் கார் திட்டத்தை கையிலெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, March 16, 2015, 17:26 [IST]
English summary

 Volkswagen, the German carmaker has confirmed plans for hybrid, electric and fuel celled vehicles that will be introduced in the market over the next 10 years. But the most interesting part of the confirmation is that there will be an all electric Porsche along with the launch of these new cars.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+