ஃபோர்டு ஆஸ்பயர் கார் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார், டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
மிக சவாலான விலையில், சிறப்பான பாதுகாப்பு வசதிகள் மூன்றுவிதமான எஞ்சின் ஆப்ஷன்களுடன் கலக்கலாக களமிறங்கியுள்ளது புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார். கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்
நவ நாகரீக டிசைன் அமைப்பை கொண்ட மாடலாக வந்திருக்கிறது. 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் செடான் காரை வடிவமைப்பதில் இருக்கும் சவால்களை திறமையாக எதிர்கொண்டு இந்த காரை உருவாக்கியிருக்கின்றனர். 3,995மிமீ நீளமும், 1,695மிமீ அகலமும், 1,525மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 2,491மிமீ வீல் பேஸ் கொண்டுள்ளது. 174மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

எஞ்சின்
இரண்டுவிதமான பெட்ரோல் எஞ்சின்கள் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்த காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 87 பிஎச்பி பவரையும், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 110 பிஎச்பி பவரையும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சினஅ 99 பிஎச்பி பவரையும் வழங்கும்.

கியர்பாக்ஸ் ஆப்ஷன்
இந்த காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடலும், 1.5 லிட்டர் டீசல் மாடலிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும். 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் 6 ஸ்பீடு டியூவல் கிளட்ச் [ஆட்டோமேட்டிக்] கியர்பாக்ஸ் மாடலில் கிடைக்கும்.

மைலேஜ்
புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.2 கிமீ மைலேஜையும், 1.5 லிட்டர் பெட்ரோல் மாடல் 17.2 கிமீ மைலேஜையும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மாடல் லிட்டருக்கு 25.83 கிமீ மைலேஜையும் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்
பேஸ் மாடல் உள்பட அனைத்து வேரியண்ட்டுகளிலும் டியூவல் ஏர்பேக்குகள் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கிறது. டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகல், இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பனி விளக்குகள், ஃபோர்டு மைகீ என்ற ஸ்மார்ட் சாவி மற்றும் ஃபோர்டு சிங்க் சிஸ்டம் போன்றவை இடம்பெற்றிருக்கிறது.

விலை விபரம் - 1.2 லிட்டர் பெட்ரோல்
ஆம்பியன்ட்: ரூ.4.89,990
டிரென்ட்: ரூ.5,76,990
டைட்டானியம்: ரூ.6,69,990
டைட்டானியம் ப்ளஸ்: ரூ.7,24,990
![விலை - 1.5 லிட்டர் பெட்ரோல் [ஆட்டோமேட்டிக்] விலை - 1.5 லிட்டர் பெட்ரோல் [ஆட்டோமேட்டிக்]](https://images.drivespark.com/ta/img/2015/08/12-1439369790-ford-figo-aspire-launch-13.jpg)
விலை - 1.5 லிட்டர் பெட்ரோல் [ஆட்டோமேட்டிக்]
டைட்டானியம்: ரூ.7,79,990

விலை - 1.5 லிட்டர் டீசல் மாடல்
ஆம்பியன்ட்: ரூ.5,89,990
டிரென்ட்: ரூ.6,76,990
டைட்டானியம்: ரூ.7,69,990
டைட்டானியம் ப்ளஸ்: ரூ.8,24,990
[அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலைகள்]


Click it and Unblock the Notifications








