2016 ஃபோர்ட் கோப்ரா ஜெட் மஸ்டாங் அறிமுகம் !

By Ravichandran

2016 ஃபோர்ட் கோப்ரா ஜெட் மஸ்டாங், அபாரமான முறையில் அதன் திறனை வெளிபடுத்தும் வீடியோ வெளியிடபட்டுள்ளது.

இந்த ஃபெர்பார்மன்ஸ் மாடல் காரின் விவரக்குறிப்புகளும் வெளியிடபட்டுள்ளது. இந்த கார் 2015 செமா மோட்டர் ஷோவில் அறிமுகம் செய்யபடுகின்றது.

2015 செமா மோட்டர் ஷோ;

2015 செமா மோட்டர் ஷோ;

2015 செமா மோட்டர் ஷோ நவமபர் 3 முதல் நவம்பர் 6 வரை நடைபெற்று வருகின்றது.

செமா மோட்டர் ஷோ, உலகின் முன்னணி சிறப்பு வாகனங்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பான பொருட்களை காட்சிபடுத்தும் வர்த்தக நிகழ்வாக உள்ளது.

அமெரிக்காவின் லாஸ் வேகஸில் நடைபெறும் இந்த செமா மோட்டர் ஷோ, வாகன வர்த்தகர்கள் மட்டுமே பங்குபெறும் நிகழ்வாக உள்ளது. இதில், பொதுமக்கள் பங்குபெறுவதற்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2016 ஃபோர்ட் கோப்ரா ஜெட் மஸ்டாங், 5.0 - லிட்டர், வி8 சூப்பர் சார்ஜ்ட், பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட்டுள்ளது. ஃபோர்ட் ஃபெர்பார்மன்ஸ்ஸுடன் ட்யூன் செய்யபட்டுள்ள இதன் இஞ்ஜின் 575 பிஹெபி ஆற்றலை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

2016 ஃபோர்ட் கோப்ரா ஜெட் மஸ்டாங் காரின் இஞ்ஜினை குளிர்விக்கும் வகையில், ஃபோர்ட் ஒரு எல்க்ட்ரிக் வாட்டர் பம்பை பொருத்தி உள்ளது. இந்த சிஸ்டம், ஃபோர்ட்டின் சி-மேக்ஸ் ஹைபரிட் மாடலில் இருந்து ஏற்றுக்கொள்ளபட்டு, இந்த புதிய மஸ்டாங் காரில் உபயோக படுத்தப்டுகிறது.

திறன்;

திறன்;

ஃபோர்ட் கோப்ரா ஜெட் மஸ்டாங், கார் மைல் தூரத்தை 8 நொடிகளில் கடந்துவிடும் ஆற்றல் கொண்டுள்ளது. இது மிகவும் குறிப்பிடதக்க சாதனையாகும்.

இதில் உபயோகிக்கப்பட்டுள்ள இஞ்ஜின், தற்போது தயாரிப்பு நிலையில் உள்ள மஸ்டாங் ஜிடி காரில் உபயோகிக்கபட்டுள்ள 75 சதவிகித பாகங்களை கொண்டுள்ளது. ஃபோர்ட் ஃபெர்பார்மன்ஸ் பிரிவு, இந்த ஃபோர்ட் கோப்ரா ஜெட் மஸ்டாங் காருக்கு ஒரு ஃப்ரண்ட் இன்லெட் விப்பில் சூப்பர்சார்ஜர்

பொருத்தியுள்ளது.

மற்ற சிறப்பம்சங்கள்;

மற்ற சிறப்பம்சங்கள்;

இந்த ஃபோர்ட் கோப்ரா ஜெட் மஸ்டாங் காருக்கு 8.50-சர்டிஃபட் ரோல் கேஜ், கார்போ எஃப்ஐஏ சீட்கள், 5-பாய்ண்ட் ரேஸ் ஹார்னெஸ் உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், டிரங்க்-மவுண்டட் ஃப்யூவல் செல்லுடன் கூடிய ஏரோமோட்டிவ் ஃப்யூவ் சிஸ்டம் மற்றும் ரேஸ்-ஸ்பெக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட அம்சங்களையும் ஃபோர்ட் ஃபெர்பார்மன்ஸ் பிரிவு, இந்த புதிய மஸ்டாங் காரில் இணைத்துள்ளனர்.

லிமிடெட் எடிஷன்;

லிமிடெட் எடிஷன்;

பல்வேறு சிறப்புகள் கொண்ட ஃபோர்ட் கோப்ரா ஜெட் மஸ்டாங் மாடலில், மொத்தம் 50 கார்கள் மட்டுமே தயாரிக்கபட உள்ளது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

2016 ஃபோர்ட் கோப்ரா ஜெட் மஸ்டாங் மாடலில், 50 கார்கள் மட்டுமே தயாரிக்கபட உள்ளது.

புதிய ஃபோர்ட் கோப்ரா ஜெட் மஸ்டாங், டீப் இம்பேக்ட் புளூ மற்றும் கோப்ரா ஜெட் லிவரியுடன் கூடிய ஆக்ஸ்ஃபோர்ட் வைட் பெயிண்ட் உள்ளிட்ட 2 விதமான கலர்களில் மட்டுமே கிடைக்க உள்ளது.

மொத்தமாக தயாரிக்கப்பட உள்ள 50 கார்கள், 25 கார்கள் டீப் இம்பேக்ட் புளூ நிறத்திலும், 25 கார்கள் ஆக்ஸ்ஃபோர்ட் வைட் பெயிண்ட் நிறத்திலும் தயாரிக்கப்பட உள்ளது.

உற்பத்தி;

உற்பத்தி;

2016 ஃபோர்ட் கோப்ரா ஜெட் மஸ்டாங் மாடல் உற்பத்தி, மிச்சிகனில் உள்ள ஃபோர்ட்டின் ஃப்ளாட் ராக் ஃபெசிலிட்டியில் துவங்கபட்டுள்ளது.

டெலிவரி;

டெலிவரி;

2016 ஃபோர்ட் கோப்ரா ஜெட் மஸ்டாங் மாடல் கார்களின் டெலிவரி 2016-ஆம் ஆண்டின் முதல் 2016 முதல் காலாண்டு முதல் துவங்கும் என ஃபோர்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வீடியோ;

ஆற்றல்மிக்க 2016 ஃபோர்ட் கோப்ரா ஜெட் மஸ்டாங் மாடல் கார், முழு திறனுடன் சீறும் வீடியோவை காணலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 5, 2015, 16:30 [IST]
English summary
Ford Cobra Jet Mustang details revealed and video released. Ford Cobra Jet Mustang is to be revealed at 2015 SEMA Show. Ford Performance has confirmed that only 50 of these race-ready models will be built.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+