டிசம்பரில் ஓர் தீபாவளி... ஃபோர்டு வழங்கும் ‘தீவாளி ரிடர்ன்ஸ்’ ஆஃபர்கள் - விபரம்

Written By:

ஃபோர்டு நிறுவனம், ஃபோர்டு 'தீவாளி ரிடர்ன்ஸ்' என்ற பெயரில் புதிய குறுகிய கால சலுகைகளை வழங்கியுள்ளனர்.

வருடம் நிறைவு அடையும் இந்த நேரத்தில், பல்வேறு கார் நிறுவனங்கள் வெவ்வேறு பெயர்களில் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான ஆஃபர்களை வழங்கி வருகின்றனர்.

தங்கள் நிறுவனம் சார்பாக, ஃபோர்டு வழங்கும் சலுகைகள் குறித்த விவரங்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

சலுகைகளின் மதிப்பு;

சலுகைகளின் மதிப்பு;

‘தீவாளி ரிடர்ன்ஸ்' என்ற பெயரில் ஃபோர்டு நிறுவனம், 12 கோடி ரூபாய் மதிப்பிலான சலுகைகளை வழங்குகின்றது.

சலுகைகள் கிடைக்கும் காலம்;

சலுகைகள் கிடைக்கும் காலம்;

ஃபோர்டு வழங்கும் இந்த சலுகைகள் குறுகிய கால ஆஃபர்களாக உள்ளது.

ஃபோர்டு ‘தீவாளி ரிடர்ன்ஸ்' என்ற பெயரில் வழங்கபடும் இந்த சலுகைகள், டிசம்பர் 11-ஆம் தேதி முதல் டிசம்பர் 13-ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்க உள்ளது.

சலுகைகளுடன் கிடைக்கும் கார்கள்;

சலுகைகளுடன் கிடைக்கும் கார்கள்;

ஃபோர்டு இந்தியா மூலம் வழங்கபடும் இந்த ‘தீவாளி ரிடர்ன்ஸ்' சலுகைகள், புதிய ஃபிகோ, ஃபிகோ ஆஸ்பையர் மற்றும் ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட 3 கார்களின் மீது மட்டுமே வழங்கபடுகிறது.

ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பையர்;

ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பையர்;

ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பையர் காம்பேக்ட் செடான் மீது தான் அதிகபடியான ஆதாயங்கள் வழங்கபடுகிறது.

ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பையர் மீது 62,000 ரூபாய் மதிப்பிலான சலுகைகள் வழங்கபடுகிறது அல்லது இதன் ஃபைனான்ஸ் தேர்வு, 7.99% என்ற ஈர்க்கும் வகையிலான வட்டி விகிதத்தில் கிடைக்கின்றது.

ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பையர் காரின் பேஸ் (அடிப்படை) மாடல், 4.89 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலையில் கிடைக்கின்றது.

ஃபோர்டு ஃபிகோ ஹேட்ச்பேக்;

ஃபோர்டு ஃபிகோ ஹேட்ச்பேக்;

ஃபோர்டு ஃபிகோ ஹேட்ச்பேக் மாடல் மீது 53,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் வழங்கபடுகிறது.

இரண்டாம் தலைமுறை ஃபோர்டு ஃபிகோ, சமீபத்தில் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டது.

ஃபோர்டு ஃபிகோ ஹேட்ச்பேக், 4.29 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலையில் விற்கபடுகின்றது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்;

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்;

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யூவி காரின் மீது 44,000 வரையிலான ஆதாயங்கள் வழங்கபடுகின்றது. மேலும், ஃபைனான்ஸ் ஸ்கீம்களை தேர்வு செய்பவர்களுக்கு, 7.99 சதவிகிதம் என்ற வட்டி விகிதத்தில் ஃபைனான்ஸ் கிடைக்கின்றது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி, சமீபத்தில் தான் இந்திய வாகன சந்தைகளுக்காக மேம்படுத்தபட்டு அறிமுகம் செய்யபட்டது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யூவியின் பேஸ் (அடிப்படை) மாடல், 6.80 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலையில் விற்கபடுகின்றது.

சலுகைகள் கிடைக்க செய்ய வேண்டியவை;

சலுகைகள் கிடைக்க செய்ய வேண்டியவை;

ஃபோர்டு நிறுவனம் சார்பாக வழங்கபடும் ஆஃபர்கள், டிசம்பர் 11-ஆம் தேதி முதல் டிசம்பர் 13-ஆம் தேதிகளில் மட்டுமே குறுகிய கால சலுகைகளாக வழங்கபடுகின்றது.

இதனால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள அங்கிகரிக்கபட்ட ஃபோர்டு ஷோரூம்களுக்கு சென்று, இந்த 3 நாட்களுக்குள் தங்களுக்கு பிடித்த ஃபோர்டு நிறுவன கார்களை புக்கிங் செய்து கொள்ள வேண்டும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரெனோ நிறுவனம் வழங்கும் 'டிசம்பர் செலிப்ரேஷன்ஸ்' - டிஸ்கவுண்ட்டுகள், ஆஃபர்கள் மழை துவங்கியது

செவர்லே வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள் - விபரம்!

ரிமம்பர் டிசம்பர் ஆஃபர்... டொயோட்டாவின் டிசம்பர் ஆஃபர் விபரம்!

செய்திகள் உடனுக்குடன்...

செய்திகள் உடனுக்குடன்...

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

English summary
Ford India has introduced a bunch of offers by the name Ford Diwali Returns. This Diwali Returns offer is only for a limited period and is available on select models only. Ford India provides these benefits and offers only on 3 cars, which includes all-new Figo, Figo Aspire, and EcoSport models.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark