சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஃபோர்டு ஆஸ்பயர் தரிசனம்...!!

By Saravana

கடந்த மாதம் குஜராத் மாநிலம், சனந்த் தொழிற்பேட்டையில் அமைக்கப்பட்டிருக்கும் ஃபோர்டு நிறுவனத்தின் புதிய கார் தொழிற்சாலை திறக்கப்பட்டது. அப்போது, ஃபோர்டு நிறுவனம் தனது ஆஸ்பயர் என்ற புதிய காம்பேக்ட் செடான் காரையும் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், இந்த புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரை பிரபலப்படுத்தும் முயற்சிகளை அந்த நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்த புதிய காரின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்களை பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ளும் விதத்தில் நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள வணிக வளாகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சென்னை, குர்கான் உள்ளிட்ட பல நகரங்களில் இந்த கார் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த மாதமும், அடுத்த மாதமும் நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள வணிக வளாகங்களில் இந்த கார் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இந்த புதிய காரை பற்றிய முக்கிய விபரங்கள் மற்றும் சென்னை, கோவை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் இந்த கார் காட்சிக்கு வைக்கப்படும் கால அட்டவணை குறித்த தகவல்கள் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 4 மீட்டர் செடான்

4 மீட்டர் செடான்

மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் உள்ளிட்ட கார்களுக்கு நேரடி போட்டியாக 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக இந்த புதிய கார் வர இருக்கிறது. வடிவமைப்பில் மிகச்சிறப்பாக இருப்பது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காம்பேக்ட் செடான் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் அளிக்கப்பட உள்ளன. இதில், பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களிலும், டீசல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் வர இருக்கிறது.

டாப் வசதிகள்

டாப் வசதிகள்

இந்த காரின் டாப் வேரியண்ட் மிகச்சிறப்பான வசதிகளை அளிக்கும். ஆம், இந்த காரின் டாப் வேரியண்ட்டில் ஃபோர்டு சிங்க் தகவல் தொடர்பு வசதி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, 6 ஏர்பேக்குகள் கொண்டதாக வருகிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 சென்னை விபரம்

சென்னை விபரம்

இன்றும், நாளையும் ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் இந்த புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். வரும் 16 மற்றும் 17 தேதிகளில் அமைந்தகரையில் உள்ள அம்பா ஸ்கைவால்க் வளாகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். அடுத்த மாதம் 6 மற்றும் 7 தேதிகளில் வேளச்சேரியிலுள்ள ஃபீனிக்ஸ் வணிக வளாகத்தில் இந்த கார் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

கோவை விபரம்

கோவை விபரம்

வரும் 23 மற்றும் 24 தேதிகளில் கோவையில் உள்ள புரூக்ஃபீல்டு மாலில் இந்த புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 பெங்களூர் விபரம்

பெங்களூர் விபரம்

வரும் 13 மற்றும் 14 தேதிகளில் பெங்களூரில் உள்ள ஒரியான் வணிக வளாகத்திலும், அடுத்த மாதம் 20 மற்றும் 21 தேதிகளில் ஒயிட்ஃபீல்டு மெயின் ரோட்டில் உள்ள ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியிலும் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 9, 2015, 14:51 [IST]
English summary
Ford Figo Aspire Makes First Public Appearance In Metro Cities.
மேலும்... #ஆஸ்பயர் #ford #aspire
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+