ஜூலை 27 முதல் புதிய ஃபோர்டு ஆஸ்பயருக்கு முன்பதிவு ஆரம்பம்!

By Saravana

வரும் திங்கட்கிழமை முதல் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காம்பேக்ட் செடான் காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கப்படுகிறது.

4 மீட்டர் நீளத்துக்கும் குறைவான செடான் கார் மார்க்கெட்டில் 5வது மாடலாக ஃபோர்டு நிறுவனத்தின் புதிய ஆஸ்பயர் கார் களமிறங்குகிறது.

Ford Aspire

ஈக்கோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யூவிக்கு அடுத்ததாக, ஃபோர்டு நிறுவனத்திடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல். இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் மாடல்களில் வருகிறது.

சிறப்பான தொழில்நுட்ப வசதிகள், டிசைன் போன்றவை ஃபோர்டு ஆஸ்பயர் கார் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காருக்கான முன்பதிவு நாளை மறுதினம் துவங்கப்படுகிறது.

ரூ.30,000 முன்பணம் செலுத்தி இந்த புதிய காரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ஃபோர்டு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த மாதம் இந்த புதிய கார் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த காரின் சாதக, பாதகங்கள் குறித்த தகவல்களை எமது டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் மூலமாக படித்து தெரிந்து கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்...!!

More from DriveSpark

Article Published On: Saturday, July 25, 2015, 11:10 [IST]
English summary
Ford Figo Aspire is one of the highly anticipated products in recent times from the American manufacturer. This is their very first compact sedan for India and bookings for it open on 27th July, 2015.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+