தீபாவளி ரிலீஸ் பட்டியலில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட்!
சிறிய மாற்றங்களுடன் கூடிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் டீசர் படம் ஒன்று நேற்று ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக, அந்த எஸ்யூவியின் புதிய மாடல் விரைவில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகியிருக்கிறது.
தீபாவளிக்கு முன்னதாகவே புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடல் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. புதிய மாடல் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்
புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் புதிய டீசரில் புதிய மாடல் எல்இடி பகல்நேர விளக்குகளுடன் வருவதை மட்டும் உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. முகப்பில் அதிக மாற்றங்கள் இருக்காது.

புதிய வண்ணங்கள்
புதிய வண்ணங்களில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பேர் வீல்
பின்புற கதவில் பொருத்தப்பட்டிருந்த ஸ்பேர் வீல் இடம் மாற்றம் காண இருக்கிறது. இதன்மூலமாக, நகர்ப்புறத்திற்கு ஏற்ற அம்சம் கொண்ட மாடலாக மாற இருக்கிறது.

இன்டிரியர்
இன்டிரியரில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் தரம் கொண்ட பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதன்மூலமாக, பிரிமியம் மாடலாக மாற்றம் காண இருக்கிறது.

எஞ்சின்
எஞ்சின் ஆப்ஷன்களில் மாற்றங்கள் இருக்காது. அதேநேரத்தில், அதிக மைலேஜ் தரும் வகையில், எஞ்சின்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை அதிகரிக்கும்
புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட எஸ்யூவியில் இடம்பெறும் கூடுதல் சிறப்பம்சங்கள் மூலமாக, அந்த எஸ்யூவியின் விலை ரூ.30,000 வரை அதிகரிக்கப்படலாம் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








