இந்தியாவில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செவர்லே பீட் டீசல் கார்கள் ரீகால் செய்யப்படுகிறது
குறைபாடுடைய உதிரிபாகத்தை மாற்றித் தருவதற்காக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செவர்லே பீட் டீசல் கார்களை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் திரும்ப அழைக்க இருக்கிறது.
தற்போது ரீகால் செய்யபட உள்ள செவர்லே பீட் மாடல் கார்கள், டிசம்பர் 2010 முதல் ஜூலை 2014-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தயாரிக்கபட்டவையாகும்.
குறைபாடுடைய கிளட்ச் பெடல் லிவர் பொருத்தபட்டுள்ளது கணடறியபட்ட நிலையில், இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளபடுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜிஎம் மோட்டார்ஸ், நாங்கள் எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்கியுள்ள வாடிக்கையாளர்களின் நலன் கருதி, தாமாக முன் வந்து இந்த ரீகால் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்.
பாதிக்கபட்ட செவர்லே பீட் டீசல் வாடிக்கையாளர்கள், இந்தியா முழுவதிலும் உள்ள 248 அங்கிகரிக்கபட்ட சர்வீஸ் மையங்களுக்கு கொண்டு சென்று, குறைபாடுடைய கிளட்ச் பெடல் லிவரை சரி செய்து கொள்ளலாம். இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது.
இந்த குறைபாடுடைய கிளட்ச் பெடல் லிவர், தொடர் உபயோகத்தின் போது, உடையக்கூடிய அபாயம் இருக்கிறது. தரம் மற்றும் அக்கரையை அதிகமாக கொண்டுள்ள எங்கள் நிறுவனம், அனைத்து விஷயத்திலும், வாடிக்கையாளர்களின் நலன் கருதியே அனைத்து நடவடிக்களை மேற்கொண்டு வருகின்றோம்.
தவறுகள் நிகழாதவாறு பார்த்து கொள்வதும், அப்படி மீறி ஏதாவது நிகழ்ந்தாலும், அவற்றை சரி செய்வதில் முழு அக்கறை செலுத்தி வருகின்றோம் என ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த ரீகால் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள டீலர்ஷிப்களிடம் அணுகி, தங்கள் வாகனத்தை பரிசோதனை செய்வதற்கான நேரத்தை முன்கூட்டியே நிர்ணயித்து கொள்ளலாம். அதன்பின், குறித்த நேரத்தில் அவர்களது செவர்லே பீட் டீசல் மாடலை கொண்டு சென்று சரி செய்து கொள்ளலாம்.

இந்த அனைத்து ரிபேர்களும் இலவசமாக செய்து தரப்பட உள்ளது. 2013-ஆம் ஆண்டில், மல்டி பல்பர்ஸ் வெஹிகிளாக விளங்கும் 1.14 லட்சம் செவர்லே தவேரா கார்கள் திரும்ப பெறபட்டது. எமிஷன் (மாசு வெளிப்பாடு) மற்றும் ஸ்பெசிஃபிகேஷன் உள்ளிட்ட சிக்கல்களால், இவை 2005 முதல் 2013-ஆம ஆண்டுகளுக்கு மத்தியில் தயாரிக்கபட்டவை எனப்து குறிப்பிடதக்கது.
கடந்த வாரம் ஜப்பானிய நிறுவனமான ஹோண்டாவின் சிட்டி, மற்றும் எம்பிவி மோபிலியோ கார்கள் ரீகால் செய்யப்பட்டன. மொத்தம் 90,210 கார்கள் ரீகால் செய்யபட்டது நினைவிருக்கலாம்.
முன்னதாக, ஆடி, ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் பிராண்ட்களை சேர்ந்த 3,23,700 கார்களை ரீகால் செய்ததது. இது மாசு உமிழ்வு சோதனையில் தேறாமல் இருந்தது, முக்கிய காரணமாக சொல்லபடுகிறது.
சியாம் சமீபத்தில், வாகன நிறுவனங்கள், தங்கள் கார்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்ய, ரீகால் நடவடிக்கைகளுக்கு பரிந்துரை செய்ததது. அப்போது முதல், கார்களின் ரீகால் நடவடிக்கை கூடிகொண்டே தான் இருக்கின்றது.
இதுவரை, இந்தியாவில் வெவ்வேறு கார் உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்பட்ட 18.04 லட்சம் வாகனங்கள் திரும்ப பெறபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications