சோதனையின்போது 11 விபத்துக்களின் சிக்கிய கூகுள் தானியங்கி கார்!

Written By:

ஓட்டுனர் இல்லாமல் தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்கள் மிகுந்த பாதுகாப்பானவை என்று கூறப்படுகிறது. மேலும், எதிர்காலத்தில் விபத்துக்களை குறைப்பதில் இந்த தானியங்கி கார் தொழில்நுட்பம் மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில், சோதனைகளின்போது கூகுள் தயாரித்து சோதனை நடத்தி வரும் தானியங்கி கார் 11 விபத்துக்களில் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில், இந்த விபத்துக்களில் ஒன்றுகூட கூகுள் தானியங்கி காரால் ஏற்படவில்லையாம்.

Driverless Car
 

அனைத்தும் பிற காரணங்களால் ஏற்பட்டது என்றும், அந்த விபத்துக்களில் கூகுள் தானியங்கி கார் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரங்களில் வைத்து சோதனை செய்யப்பட்டபோது, சிக்னல்களில் கார் நிறுத்தப்படும்போது பின்னால் வரும் வாகனங்கள் மோதி 7 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாம்.

இதில், 4 விபத்துக்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்ததுள்ளது. இந்த விபத்துக்கள் கூகுள் தானியங்கி கார்களால் ஏற்படவில்லை என்று போலீஸ் விசாரணை கூறுகிறது. இதுவரை கூகுள் தானியங்கி கார்கள் 2.7 மில்லியன் கிலோமீட்டர் தூரம் ஓட்டி சோதனை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The heated debate exists with many about the safety of self driven cars or autonomous cars. And just when people are on the verge of being convinced, comes breaking news-Google autonomous cars involved in 11 accidents!
Story first published: Friday, May 15, 2015, 10:27 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark