கார் நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச மைலேஜ் வரம்பு உயர்வு

By Saravana

கார் நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச மைலேஜ் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. வரும் 2017ம் ஆண்டு முதல் இந்த புதிய மைலேஜ் வரம்பு அமலுக்கு வருகிறது.

புதிய விதிமுறையின்படி, சராசரியாக லிட்டருக்கு 18.2 கிமீ மைலேஜை கார் நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச மைலேஜ் வரம்பாக நிர்ணயிக்கப்பட உள்ளது. கார் மற்றும் யுட்டிலிட்டி ரக பயணிகள் வாகனங்களுக்கு இது பொருந்தும்.

Mileage

அதேவேளை, இது ஒரு நிறுவனத்தின் அனைத்து கார்களுக்கான சராசரி மைலேஜாக கணக்கிடப்படும். ஒவ்வொரு காருக்கும் தனித்தனியாக கணக்கிடப்படாது. ஒரு மாடல் அதிகமாகவும், ஒரு மாடல் குறைவாகவும் இருந்தால் பரவாயில்லை.

ஆனால், ஒரு கார் நிறுவனத்தின் அனைத்து கார் மாடல்களின் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 18.2 கிமீ என்ற அளவைவிட குறைவாக இருக்கக்கூடாது. மேலும், 2022ம் ஆண்டு முதல் கார் நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச சராசரி மைலேஜ் லிட்டருக்கு 22.0 கிமீ மைலேஜ் என்ற அளவில் நிர்ணயிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

பஸ் மற்றும் டிரக்குகளுக்கான குறைந்தபட்ச மைலேஜை தனியாக வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இந்த விதிமுறை அமலில் இருக்கிறது.

இந்த விதிமுறையை மீறும் கார் நிறுவனங்கள் மீது கணிசமான அளவு அபராதம் விதிக்க வழிவகையுண்டு. தற்போது கார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் குறைந்தபட்ச மைலேஜ் அளவைவிட இது 15 சதவீதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 14, 2015, 15:28 [IST]
English summary
The Indian government has fixed compulsory minimum vehicle mileage as 18.2 kpl from April 20017 onwards. This is a 15 percent increase from what is mandatory today.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+