‘ஹேப்பி வித் நிஸ்ஸான்’ சர்வீஸ் முகாம்கள், இந்தியா முழுவதும் துவக்கம்
நிஸ்ஸான் நிறுவனத்தின், 'ஹேப்பி வித் நிஸ்ஸான்' என்ற நான்காவது சிறப்பு கார் சர்வீஸ் முகாம்கள் துவங்கப்பட்டுள்ளன.
இது வரை, நிஸ்ஸானின் மூன்று சர்வீஸ் முகாம்கள் நடத்தபட்டுள்ளது. இதன் மூலம் 75,000 வாடிக்கையாளர்கள் பயன் அடைந்துள்ளனர். இதையடுத்து, நிஸ்ஸான் நிறுவனம், தங்களின் நான்காவது சீசனை துவங்கியுள்ளனர்.
'ஹேப்பி வித் நிஸ்ஸான்' சர்வீஸ் முகாம், நவம்பர் 19-ஆம் தேதி துவங்கி, நவம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெற்று வருகின்றது. இந்த முகாம்கள் நாடுமுழுவதும், 120 நகரங்களில் பரவியுள்ள, 140 சர்வீஸ் செண்டர்களில் நடத்தபடுகிறது.
'ஹேப்பி வித் நிஸ்ஸான்' என்ற பெயரில் நடததப்படும் இந்த சர்வீஸ் முகாம்கள், வாடிக்கையாளர்களிடம் இவர்கள் கொண்டுள்ள அக்கரையை வெளிபடுத்தும் ஒரு முயற்சியாக உள்ளது. இத்தகைய சர்வீஸ் முகாம்கள் மூலம் வாடிக்கையாளர்களிடம் நேருக்கு நேர் உறையாடி, அவர்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற தீர்வுகளை வழங்க உதவுகின்றது.
இத்தகைய முகாம்களில் இலவச வாகன சோதனை, ஈர்க்கும் வகையிலான டிஸ்கவுண்ட்கள் வழங்கப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்களை மையபடுத்திய தகவல் பரிமாற்றங்கள், தீர்க்கப்படாமல் உள்ள பிர்ச்னைகளுக்கும் தீர்வுகள் காண முயற்சிப்பதும் நடைபெறுகின்றது.
மேலும், அங்கிகரிக்கபட்ட நிஸ்ஸான் சர்வீஸ் செண்டர்களின் ஆதாயங்களை விளக்கும் முயற்சிகளும், நிஸ்ஸானின் ஒரிஜினல் ஸ்பேர் பாகங்கள் மற்றும் ஆக்சஸரீஸ் உபயோகிப்பதன் பலன்களை குறித்து வாடிக்கையாளர்களுக்கும் விளக்கும் நடவடிக்கைகளும் மே்கொள்ளபடுகிறது.
'ஹேப்பி வித் நிஸ்ஸான்' முகாம்களை துவக்கி வைத்து பேசிய, நிஸ்ஸான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மிகுந்த பெருமிதத்தை வெளிபடுத்தினார். மேலும், இத்தகைய முகாம்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் இன்னும் அதிகமாக புரிந்து கொள்ள முடிகிறது என்றார்.

நவம்பர் 19 முதல் நவம்பர் 28 வரை நடைபெறும் இந்த 'ஹேப்பி வித் நிஸ்ஸான்' சர்வீஸ் முகாம்களில் பங்கு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு என்ன என்ன சலுகைகள் கிடைக்க உள்ளது என தெரிந்து கொள்வோம்.
(*) இலவச கார் செக்கப்
(*) இலவச கார் டாப் வாஷ்
(*) லேபர் சார்ஜ்களில் 20% தள்ளுபடி
(*) எல்லா வாகனக்களுக்கும் 60-பாய்ண்ட் செக்கப்கள் நடத்தபடும்
(*) நிஸ்ஸானின் ஜெனியூன் (ஒரிஜினல்) உதிரி பாகங்கள் மீது 20 % வரை தள்ளுபடி
(*) பேஸ் பிரைஸ் எனும் அடிப்படை விலையில், 365 நாட்கள் வரையிலான நிஸ்ஸானின் எக்ஸ்டெண்டட் வாரண்டி
(*) மேலும், இரண்டாம் ஆண்டு முதல் வாரண்டிக்கான கட்டணங்களில் 10% தள்ளுபடி
இதோடு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு நிஸ்ஸானின் ஒரிஜினல் உதிரி பாகங்கள், கார் பராமரிப்புக்கு தேவையான பொருட்கள், இலவசமாக கார் கழுவுவதற்கான கூப்பன்கள், ரெஸ்டாரண்ட் மற்றும் சினிமா கூப்பனகள் வெல்லும் வாய்ப்புகள் வழங்கபடுகிறது.


Click it and Unblock the Notifications








