கனமழையால் சென்னை வாகன ஆலைகளில் உற்பத்தி கடும் பாதிப்பு!

Posted By:

கனமழை காரணமாக ஊழியர்கள் பணிக்கு வராததால், சென்னையில் உள்ள வாகன ஆலைகளில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

கனமழை காரணமாக சென்னை சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை நீர் வடியாததால், பல பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

கார் உற்பத்தி
 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால், அலுவலகங்கள், வர்த்தக ஸ்தாபனங்களில் ஊழியர்கள் வருகை மிகவும் குறைவாக உள்ளது.

மேலும், இந்தியாவின் வாகன உற்பத்தியின் முக்கிய கேந்திரமாக விளங்கும் சென்னையில் ஃபோர்டு, ரெனோ- நிசான், டெய்ம்லர், பிஎம்டபிள்யூ, ராயல் என்ஃபீல்டு என பல முன்னணி நிறுவனங்களின் வாகன உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஊழியர்கள் பணிக்கு வராததால், பெரும்பாலான வாகன ஆலைகளில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. ரெனோ- நிசான், டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ், ஃபோர்டு, அசோக் லேலேண்ட், யமஹா மற்றும் ராயல் என்ஃபீல்டு ஆலைகளில் நேற்று உற்பத்தி முடங்கியது.

ஊழியர்கள் வராததால், ஃபோர்டு மற்றும் ரெனோ- நிசான் நிறுவனங்கள் உற்பத்தி முடங்கியதாக தெரிவித்துள்ளன. அதேநேரத்தில், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலையில் வழக்கம்போல் கார் உற்பத்திப் பணிகள் நடந்ததாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பெரும்பாலான ஊழியர்கள் ஆலைக்கு அருகாமையிலேயே குடியிருப்பதால், ஊழியர்கள் பணிக்கு வருவதில் எந்த பிரச்னையும் இல்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதனிடையே பெரும் வரவேற்பை பெற்ற ரெனோ க்விட் காரின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால், குறித்த நேரத்தில் டெலிவிரி கொடுக்க முடியாத நிலை டீலர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதேபோன்று, சென்னையில் வாகனங்களை உற்பத்தி செய்து வரும் முன்னணி நிறுவனங்களின் டீலர்கள் குறித்த நேரத்தில் கார்களை டெலிவிரி செய்ய முடியாத சூழலும், ஏற்றுமதியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

English summary
சென்னையில் உள்ள வாகன ஆலைகளில் ஊழியர்கள் பணிக்கு வராததால், உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. 

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark