இந்தியாவில் புதிய செடான், எம்பிவி, எஸ்யூவி மாடல்களை களமிறக்கும் மிட்சுபிஷி?
இந்தியாவில் பல்வேறு ரக கார்களுடன் மீண்டும் தீவிர கார் வர்த்தகத்தை துவங்குவதற்கு மிட்சுபிஷி திட்டமிட்டிருக்கிறது. தற்போது பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவி மாடலை மட்டும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் துணையுடன் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவின் கார் மார்க்கெட்டின் வளர்ச்சியை மனதில் கொண்டு தீவிரமான வரத்தக முயற்சிகளை மேற்கொள்வதற்கு மிட்சுபிஷி திட்டமிட்டிருக்கிறது. தற்போது அந்த நிறுவனத்தின் பரிசீலனையில் இருக்கும் கார் மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

மிராஜ் ஹேட்ச்பேக்
2016ம் ஆண்டிற்குள் 5 புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பது மிட்சுபிஷியின் திட்டம். இந்த திட்டத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடல் மிராஜ் ஹேட்ச்பேக் கார். ஆனால், இந்த ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் மிக கடும் போட்டி இருப்பதால் மிராஜ் காரின் அறிமுகத்தை தற்போதைக்கு கைவிட்டிருக்கிறது. ஆனால், புதிய செடான் கார், 2 எஸ்யூவி மாடல்கள் மற்றும் எம்பிவி கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அட்ராஜ் செடான்
மிராஜ் ஹேட்ச்பேக் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த செடான் காரை இந்தியாவில் களமிறக்க மிட்சுபிஷி முடிவு செய்திருக்கிறது. இது மிட்சைஸ் கார் செக்மென்ட்டில் விற்பனைக்கு நிலைநிறுத்தப்படும். அடுத்த ஆண்டு அல்லது 2017 துவக்கத்தில் இந்த மாடல் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

அவுட்லேண்டர் எஸ்யூவி
அவுட்லேண்டர் எஸ்யூவியின் டீசல் மாடலை அடுத்த இரு ஆண்டுகளுக்குள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மிட்சுபிஷி திட்டமிட்டிருக்கிறது. இதன் பெட்ரோல் மாடலும் பின்னர் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

டெலிக்கா எம்பிவி
எம்பிவி கார்களுக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பை கருதி, டெலிக்கா என்ற தனது எம்பிவி கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மிட்சுபிஷி திட்டமிட்டுள்ளது. இந்த கார் டொயோட்டா இன்னோவா காருக்கு நேரடி போட்டியை வழங்கும் வடிவம், டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் கொண்டதாக இருக்கும். இந்த எம்பிவி காரை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் உதவியுடன் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து, டொயோட்டா இன்னோவாவுக்கு சவாலான நிறுத்தலாம் என்ற யோசனையும் மிட்சுபிஷியிடம் இருக்கிறது. இந்த எம்பிவி கார் தற்போது தாய்லாயந்து, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

மான்டிரோ எஸ்யூவி
அவுட்லேண்டரை போன்றே மான்டிரோ எஸ்யூவியின் டீசல் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மிட்சுபிஷி திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மாடல்கள் மூலம் இந்திய மார்க்கெட்டில் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள முடியும் என்று அந்த நிறுவனம் நம்பிக்கையுடன் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








