ஹோண்டா அமேஸ், மொபிலியோ கார்களின் ஸ்பெஷல் மாடல் அறிமுகம்
பண்டிகை காலத்தில் வாடிக்கைாளர்களை கவரும் விதமாக, ஹோண்டா அமேஸ் மற்றும் மொபிலியோ கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
ஹோண்டா அமேஸ் மற்றும் மொபிலியோ செலிபரசேஷன் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த இரு சிறப்பு பதிப்பு மாடல்களிலும் வெளிப்புறத்தில் பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் கூடுதல் சிறப்பம்சமாக இருக்கிறது.

ஸ்பெஷல் எடிசன் பேட்ஜும் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, உட்புறத்திலும் உயர்வகை அப்ஹோல்ஸ்டரி, சீட் கவர், சீட் குஷன், ஸ்டீயரிங் வீல் கவர் மற்றும் மிதியடிகள் கொடுக்கப்படுகின்றன.

டஃபேட்டா ஒயிட் மற்றும் ஆர்சிட் ஒயிட் பியர்ல் என்ற இரண்டு வெள்ளை வண்ணங்களில் மட்டுமே கிடைக்கும். அதேநேரத்தில், அனைத்து வேரியண்ட்டுகளிலும் இந்த வண்ணங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. விலை விபரம் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications








