இந்தியாவில், ஹோண்டா சிட்டி கார் திரும்ப அழைக்கப்படுகிறது!

By Saravana

இந்தியாவில், சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட ஹோண்டா சிட்டி கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன.

சிவிடி கியர்பாக்ஸை கட்டுப்படுத்தும் சாஃப்ட்வேரை மேம்படுத்தி தருவதற்காக இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கை இன்றுமுதல் துவங்கப்படுகிறது.

ஹோண்டா சிட்டி

இதன்மூலம், சிட்டி செடான் காரின் சிவிடி கியர்பாக்ஸின் ஹைட்ராலிக் சிஸ்டத்தின் செயல்திறன் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நவம்பர் வரை தயாரிக்கப்பட்ட சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட 3,879 ஹோண்டா சிட்டி கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக, வாடிக்கையாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு வருவதாக ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களது கார் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை கீழே உள்ள இணைப்பில் சென்று காரின் 17 இலக்க வின் நம்பரை கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.

ரீகால் செய்யப்பட்டிருக்கும் ஹோண்டா சிட்டி கார்களின் விபரம்!

Most Read Articles
English summary
Honda Cars India is recalling 3,879 units of a particular variant of its popular sedan City in India which were manufactured from February-November 2014 to update a software for transmission system as part of a global exercise.
Story first published: Saturday, October 24, 2015, 10:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X