ஹோண்டா கார்களின் விலை ஜனவரி முதல் உயர்த்தப்படுகிறது
ஹோண்டா நிறுவனத்தின் கார்களின் விலைகள், வரும் ஜனவரி முதல் உயர்த்தப்பட உள்ளது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தங்களின் அனைத்து ரேஞ்ஜ்களிலும், எல்லா கார்களின் விலைகளையும் 16,000 ரூபாய் வரையில் வரும் ஜனவரி 2016 முதல் உயர்த்த உள்ளதாக முறைபடி அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஹோண்டா கார்களின் உயர் அதிகாரி ஞானேஷ்வர், மாடல்களை பொருத்து, 10,000 முதல் 16,000 ரூபாய் வரை அனைத்து கார்களின் விலைகளையும் உயர்த்த உள்ளோம் என தெரிவித்தார். இந்த விலை ஏற்றம், அதிகரித்து வரும் உள்ளீடுகளின் (உபகரணங்களின்) செலவுகள் அதிகரிப்பால் தான் செய்யபடுகிறது என்றார்.

தற்போதைய நிலையில், ஹோண்டா நிறுவனம் 6 கார்களை இந்தியாவில் விற்று வருகிறது. அறிமுக நிலை ப்ரியோ ஹேட்ச்பேக் காரின் விலை 4.23 லட்சம் ரூபாயாக உள்ளது.
அதே போல், சிஆர்வி கார்களின் விலை 23.13 லட்சம் ரூபாயாக உள்ளது. இந்த அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை என்பது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications








