புதிய ஜாஸ் காரை அறிமுகத்தை மீண்டும் தள்ளி வைத்தது ஹோண்டா!

By Saravana

புதிய தலைமுறை ஜாஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதை மீண்டும் ஒத்தி வைத்திருக்கிறது ஹோண்டா கார் நிறுவனம். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த வருடமே புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த புதிய ஜாஸ் காரின் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் உற்பத்தி துவங்கப்பட்டு விட்டதையடுத்து, இந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று உறுதியாக நம்பப்பட்டது. ஆனால், மீண்டும் புதிய ஹோண்டா ஜாஸ் காரின் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பிரிமியம் ஹேட்ச்பேக்

பிரிமியம் ஹேட்ச்பேக்

பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. சிறப்பான தோற்றம், அதிக இடவசதி, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

87 பிஎச்பி பவரை அளிக்கும் 1.2 லிட்டர் ஐவிடெக் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.5 லிட்டர் ஐடிடெக் டீசல் எஞ்சின் மாடல்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்தியாவில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக கிடைக்கும்.

 இன்டிரியர்

இன்டிரியர்

தரமான பிளாஸ்டிக் பாகங்கள், வசதிகளுடன் இன்டிரியர் மிக கவர்ச்சியாக இருக்கும். யுஎஸ்பி, புளூடூத் இணைப்பு வசதியுடன் கூடிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கும்.

பாதுகாப்பு சிஸ்டம்

பாதுகாப்பு சிஸ்டம்

இபிடி தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டியூவல் ஏர்பேக்ஸ், சைடு மற்றும் கர்டெயின் ஏர்பேக்ஸ் ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன.

 ஏற்றுமதி துவங்கியது

ஏற்றுமதி துவங்கியது

இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது தாமதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவிலிருந்து புதிய ஜாஸ் கார் தென் ஆப்ரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

வரும் ஜூன் மாதம் வரை புதிய ஜாஸ் கார் அறிமுகத்தை ஹோண்டா தள்ளி வைத்திருக்கிறது. வரும் ஜூலை மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் எலைட் ஐ20க்கு சரிக்கு சமமான மாடலாக இது இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 11, 2015, 9:34 [IST]
English summary
Japanese automobile giant, Honda is expected to launch its premium hatchback in India. Now the manufacturer seems to have delayed the launch once again and has pushed it further behind to June, 2015. Various factors have this time delayed the launch and one of the main reasons is the production capacity.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+