புதிய ஹோண்டா ஜாஸ் கார் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்

By Saravana

ரூ.5.31 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஹோண்டா ஜாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மாடல் மட்டுமின்றி, முதல்முறையாக டீசல் மாடலில் வந்திருக்கும் இந்த புதிய ஹோண்டா ஜாஸ் கார் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் கலக்க வந்திருக்கும் இந்த புதிய ஹோண்டா ஜாஸ் கார் ஹூண்டாய் எலைட் ஐ20க்கு நேர் எதிரான விலை பட்டியலில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய ஹோண்டா ஜாஸ் குறித்த முக்கிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 இரண்டாம் தலைமுறை

இரண்டாம் தலைமுறை

2001ல் முதல்தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. உலக அளவில் 5.5 மில்லியன் யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2013ல் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாம் தலைமுறை மாடல் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம், தபுகெராவில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. 90 சதவீதத்திற்கும் மேல் உள்நாட்டு பாகங்கள் பயன்படுத்தப்படுவதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

 பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் ஐ- விடெக் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 90 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க்கையும் வழங்கும். பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைக்கும்.

டீசல் மாடல்

டீசல் மாடல்

முதல்முறையாக டீசல் மாடலில் ஹோண்டா ஜாஸ் விற்பனைக்கு வந்துள்ளது. அமேஸ், சிட்டி கார்களில் செயல்புரியும் அதே 1.5 லிட்டர் ஐ- டிடெக் டீசல் எஞ்சின்தான் புதிய ஜாஸ் காரிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த புதிய ஜாஸ் காரின் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும். டீசல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வந்துள்ளது.

 மைலேஜ்

மைலேஜ்

ஹோண்டா ஜாஸ் கார் வெற்றி பெறுவதற்கான முத்தாய்ப்பான விஷயம் அதிக மைலேஜ் தரும் டீசல் எஞ்சின். ஆம், டீசல் மாடல் லிட்டருக்கு 27.3 கிமீ மைலேஜ் தரும் என்று ஹோண்டா கார் நிறுவனம் தெரிவிக்கிறது. இதன்மூலம், இந்த செக்மென்ட்டில் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை ஹோண்டா ஜாஸ் பெறுகிறது. மேலும், பெட்ரோல் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் 18.7 கிமீ மைலேஜையும், சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 19 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

பெட்ரோல், டீசல் மாடல்களின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல்கள் தலா 5 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். பெட்ரோல் மாடலின் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் இரண்டு வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும்.

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

15.7 செ.மீ டச்ஸ்கிரீன் ஏவிஎன் சிஸ்டம்

அட்ஜெஸ்ட் வசதியுடன் பின்புற இருக்கைகளுக்கான ஹெட்ரெஸ்ட்

ஆட்டோமேட்டிக் ஏசி

எலக்ட்ரிக் நுட்பத்தில் மடங்கும் ரியர் வியூ கண்ணாடிகள்

ரியர் பார்க்கிங் கேமரா

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்

இபிடி பிரேக் தொழில்நுட்பம்

டியூவல் ஏர்பேக்ஸ்

7 வண்ணங்களில் புதிய ஜாஸ் கார் கிடைக்கும்.

விலை விபரம்

விலை விபரம்

பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ்

இ வேரியண்ட்: ரூ.5,30,900

எஸ் வேரியண்ட்: ரூ.5,94,000

எஸ்வி வேரியண்ட்: ரூ.6,44,900

வி வேரியண்ட்: ரூ.6,79,900

விஎக்ஸ் வேரியண்ட்: ரூ.7,29,000

பெட்ரோல் சிவிடி கியர்பாக்ஸ்

எஸ் சிவிடி: ரூ.6,99,000

வி சிவிடி: ரூ.7,85,000

டீசல் மாடல்

இ வேரியண்ட்: ரூ.6,49,900

எஸ் வேரியண்ட்: ரூ.7,14,000

எஸ்வி வேரியண்ட்: ரூ.7,64,900

வி வேரியண்ட்: ரூ.8,09,900

விஎக்ஸ் வேரியண்ட்: ரூ.8,59,000

More from DriveSpark

Article Published On: Wednesday, July 8, 2015, 13:48 [IST]
English summary
Let's take a detailed look at the New Honda Jazz's pricing, engine specifications, transmission, mileage, features and safety:
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+