சென்னையில் மழை, வெள்ளத்தினால் பாதிக்கபட்ட வாகன உரிமையாளர்ளுக்கு உதவும் ஹோண்டா

By Ravichandran

சென்னையில் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கபட்ட வாகன உரிமையாளர்ளுக்கு உதவ ஹோண்டா நிறுவனம் முன் வந்துள்ளது.

சமீபத்தில் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளங்களின் பாதிப்பினால், ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். மேலும், ஏராளமான வாகனங்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியது.

இப்படி பாதிக்கபட்ட கார் மற்றும் பிற வாகன உரிமையாளர்களுக்கு உதவ ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

இந்த கேம்பெய்னின் படி, பாதிக்கபட்ட கார்களுக்கு மேற்கொள்ளபடும் ரிப்பேர்களின் மீதான லேபர் சார்ஜ்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்யபடுகிறது.

இதோடு மட்டுமல்லாமல், பாதிக்கபட்ட உதிரி பாகங்கள் மீது 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கபடுகிறது. மேலும், ஆண்டி-ரஸ்ட், பெயிண்ட் புரொடெக்‌ஷன் (பெயிண்ட் வேலைப்பாடுகள் பாதுகாப்பு) உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் மீது 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்கபடுகின்றது.

மேலும், தற்போது சென்னை வெள்ளங்களால் பாதிக்கபட்ட, ஹோண்டா நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள், புதிய ஹோண்டா கார்கள் வாங்க விரும்பினால், அவர்களுக்கு 20,000 ரூபாய் வரையிலான லாயல்டி பாய்ண்ட்ஸ் (புள்ளிகள்) வழங்கபடுகிறது.

honda-launches-special-campaign-repair-cars-affected-by-chennai-floods

மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட கார்கள் கொண்ட வாடிக்கையாளர்கள், தங்களது பழைய ஹோண்டா கார்களை மாற்றி புதிய ஹோண்டா கார்கள் வாங்க விரும்பினால், அவர்களுக்கு 30,000 ரூபாய் வரையிலான எக்ஸ்சேஞ்ஜ் போனஸ் வழங்கபடுகிறது.

சென்னையில் ஏற்பட்ட வெள்ளங்கள் போன்ற அசாதாரன சூழ்நிலைகளில் தேவைபடும் அதிக அளவிலான ஸ்பேர்களுக்காக, கூடுதல் அளவிலான உதிரி பாகங்கள், சென்னையில் உள்ள ஹோண்டா சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 23, 2015, 10:29 [IST]
English summary
Honda Cars India Ltd has launched a special campaign to repair the Cars, which were affected by Chennai Floods. As part of this campaign, Honda has waived off the labor charges on customer's expenses for repair of affected cars. Honda also provides 10% discount on spare parts and 50% discount on services like anti-rust, paint protection etc.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+