கூடுதல் வசதிகளுடன் கூடிய இருக்கைகளுடன் ஹோண்டா மொபிலியோ!
ஹோண்டா மொபிலியோ காரில் கூடுதல் வசதிகள் தரும் புதிய இருக்கை அமைப்புகள் பற்றிய விபரம் வெளியிடப்பட்டது.
வெர்சட்டையில் சீட்ஸ் என்று இந்த இருக்கைகளை ஹோண்டா அழைக்கிறது. இரண்டாவது வரிசை மற்றும் மூன்றாவது வரிசையில் அமரும் பயணிகளுக்கு இந்த இருக்கைகள் கூடுதல் வசதிகளை அளிக்கும்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கையை பின்னால் சாய்த்துக் கொள்ளும் வசதி மற்றும் இரண்டாவது வரிசை இருக்கையை முன் பின் நகர்த்தும் வசதிகள் புதிய வெர்சட்டையில் சீட்களில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பயணிகள் தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு இருக்கை அமைப்பை சரிசெய்து வசதியாக அமரலாம். இதுதொடர்பாக, ஒரு வீடியோவையும் ஹோண்டா கார் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/EyM2JFBuwk0" frameborder="0" allowfullscreen></iframe></center>


Click it and Unblock the Notifications








