ஹூண்டாய் கார்களின் விலை ரூ.30,000 வரை உயர்த்தப்படுகிறது!

By Ravichandran

ஹூண்டாய் நிறுவனம், தங்களின் கார்களின் விற்பனை விலைகளை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் தான், பிஎம்டபுள்யூ மற்றும் மெர்சிடிஸ் நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் கார்களின் விலைகளை வரும் ஜனவரி 1, 2016-ஆம் தேதியில் இருந்து கூட்ட உள்ளதாக தெரிவித்தது. இந்த நிலையில், ஹூண்டாய் நிறுவனமும் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடதக்கது.

விலை ஏற்றம் அமலாகும் தேதி;

விலை ஏற்றம் அமலாகும் தேதி;

ஹூண்டாய் நிறுவனம் சார்பாக செய்யபட உள்ள இந்த விலையேற்றம் வரும் ஜனவரி 1, 2016 முதல் அமலாக உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

தெரிவிக்கபடும் காரணம்;

தெரிவிக்கபடும் காரணம்;

இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, உபகரணங்களின் விலை அதிகரிப்பு, உள்ளீடுகளின் கூடுதல் செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்த விலை ஏற்றம் செய்ய வேண்டிய நிலை ஏறபட்டுள்ளதாக ஹூண்டாய் நிறுவன உயர் அதிகாரி ராகேஷ் ஸ்ரிவாத்ஸ்வா தெரிவித்தார்.

விலையேற்றத்தில் சேர்க்கபட்டுள்ள கார்கள்;

விலையேற்றத்தில் சேர்க்கபட்டுள்ள கார்கள்;

தி க்ரெட்டா, எலைட் ஐ20 பிரிமியம் ஹேட்ச்பேக் மற்றும் ஐ20 ஆக்டிவ் பிரிமியம் கிராஸ்ஓவர் உள்ளிட்ட கார்களும் இந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலாக உள்ள விலை ஏற்றத்தால் பாதிக்கபட உள்ளது.

சமீபத்தில் தான், ஹூண்டாய் நிறுவனம் தங்களின் கார்களின் விலைகளை கூட்டியிருந்தது. தற்போது அறிவிக்கபட்டுள்ள இந்த விலை ஏற்றம், 3 மாத காலத்திற்குள் செய்யபடும் இரண்டாவது விலை ஏற்றம் ஆகும்.

ஹூண்டாய் கார்களுக்கு கூடும் விற்பனை;

ஹூண்டாய் கார்களுக்கு கூடும் விற்பனை;

தொடர் புதிய மாடல் கார்களின் அறிமுகத்தால், ஹூண்டாய் கார்களின் விற்பனை, தொடர்ந்து கூடி கொண்டே இருக்கின்றது.

இந்திய சந்தைகளில், க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி மிகவும் வெற்றிகரமான புதிய அறுமுகமாக உள்ளது. இது வரை ஹூண்டாய் க்ரெட்டா 70,000 புக்கிங்களை பெற்றுள்ளது. மேலும், இது அதிக அளவில் விற்பனையாவதால், அதிக காத்திருப்பு காலத்துடன் தான் கிடைக்கிறது.

விலை ஏற்றம் எவ்வளவு?

விலை ஏற்றம் எவ்வளவு?

ஹூண்டாய் நிறுவனம் சார்பாக தயாரிக்கபடும் அனைத்து கார்களும், ஜனவரி 1 முதல், சுமார் 30,000 ரூபாய் கூடுதலான விலையில் விற்கபட உள்ளது.

எனினும், விலை ஏற்றதிற்கு பிறகு எந்த கார், என்ன விலையில் விற்கபட உள்ளது என்பது தெளிவாக தெரிவிக்கபடவில்லை.

புதிய அறிமுகங்கள்;

புதிய அறிமுகங்கள்;

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பங்கு பெற உள்ளது. அப்போது, தங்கள் நிறுவனத்தின் அடுத்த 2 புதிய கார்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இதே போல், விலை ஏற்றத்தை அறிவித்துள்ள,

பிற கார் நிறுவனங்கள் தொடர்பான செய்திகளை தெரிந்து கொள்ள...

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்கள் விலை உயர்கிறது

பிஎம்டபுள்யூவின் அனைத்து கார்களின் மீதும், 3% விலை ஏற்றம் - விரிவான தகவல்கள்

செய்திகள் உடனுக்குடன்…

செய்திகள் உடனுக்குடன்…

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

Most Read Articles
English summary
Hyundai Motors has confirmed that, the prices of all their cars would be be hiked from January 1, 2016. On average each and every models from Hyundai would witness price hike of up to Rs. 30,000. Anyhow, the complete breakdown of price to be hiked on individual models are not released.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X