ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு 27,000 புக்கிங்... தலைகால் புரியா சந்தோஷத்தில் ஹூண்டாய்!

By Saravana

கடந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு இதுவரை 27,000க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எகிடுதகிடான முன்பதிவால், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் காத்திருப்பு காலம் பல மாதங்கள் நீடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

 க்ரெட்டா எஸ்யூவி

க்ரெட்டா எஸ்யூவி

ரெனோ டஸ்ட்டருக்கு நேர் போட்டியாக ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டிசைன், இடவசதி, தொழில்நுட்ப வசதிகள், விருப்பம்போல் தேர்வு செய்வதற்கான எஞ்சின் ஆப்ஷன் என ரகளையாக சமீபத்தில் களமிறங்கியது ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி.

விற்பனை இலக்கு

விற்பனை இலக்கு

மாதத்திற்கு 5,000 க்ரெட்டா எஸ்யூவிகளை விற்பனை செய்வதற்கு ஹூண்டாய் இலக்கு வைத்து களமிறங்கியது. ஆனால், முன்பதிவு எதிர்பாராத அளவு குவிந்தது. தற்போதைய நிலவரப்படி, 27,000க்கும் மேற்பட்டோர் ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு முன்பதிவு செய்துள்ளனராம்.

 அடுத்த தீபாவளிக்குத்தான்...

அடுத்த தீபாவளிக்குத்தான்...

முன்பதிவு மலைபோல் குவிந்ததால், காத்திருப்பு காலம் வெகுவாக அதிகரித்துள்ளது. அதாவது, சில வேரியண்ட்டுகளுக்கு 6 மாதங்கள் வரையிலும், டீசல் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு 10 மாதங்கள் வரையிலும் காத்திருப்பு காலம் நீள்கிறது. மேலும், நகரத்திற்கு தகுந்தாற்போல் இந்த காத்திருப்பு காலம் நீள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 எலைட் ஐ20ஐ முந்தியது....

எலைட் ஐ20ஐ முந்தியது....

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் வரலாற்றில் எலைட் ஐ20 கார்தான் குறுகிய காலத்தில் அதிக முன்பதிவுகளை பெற்றது. ஆனால், க்ரெட்டா எஸ்யூவி அதையும் தாண்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, 20 நாட்களில் 15,000க்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றுள்ளதாம்.

 உற்பத்தி அதிகரிப்பு

உற்பத்தி அதிகரிப்பு

மலைபோல் குவிந்துவிட்ட முன்பதிவுகளை கண்டு திண்டாடி போய் நிற்கும் ஹூண்டாய் வாடிக்கையாளர்களிடம் ஆர்வத்தை குறைக்காமல் கூடிய விரைவாக டெலிவிரி கொடுக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, சென்னை ஆலையில் க்ரெட்டா எஸ்யூவியின் உற்பத்தியை கூட்டுவதற்கு திட்டமிட்டு இருக்கிறது.

 மாடல்கள்

மாடல்கள்

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மூன்றுவிதமான எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ரூ.8.59 லட்சம் முதல் ரூ.13.58 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலை பட்டியலில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
English summary
The Creta has been priced competitively and has attracted several Indian customers. Hyundai Motors India has reported receiving over 27,000 bookings since the launch of the compact SUV.
Story first published: Monday, August 10, 2015, 14:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X