ஹுண்டாய் க்ரெட்டா ஆட்டோமேட்டிக் காருக்கு 6 மாதம் காத்திருப்பு காலம்!

Written By:

ஹுண்டாய் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடலுக்கான காத்திருப்பு காலம் 6 மாதங்கள் வரை நீண்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி வகை கார்களில் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. இது, மாருதியின் எஸ்-கிராஸ், ரெனோ டஸ்ட்டர் மற்றும் ஃபோர்டு எக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களை பின்னுக்கு தள்ளியுள்ளது. மேலும், மஹிந்திராவின் எக்ஸ்.யூ.வி 500 மற்றும் ஸ்கார்பியோ கார்களிடம் இருந்து, வாடிக்கையாளர்களின் கவனத்தை, ஹுண்டாய் நிறுவனம் க்ரெட்டா வசம் திருப்பியுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா கார் விற்பனையின் கடும் போட்டியை சமாளிக்க, மாருதி மற்றும் ரெனோ உள்ளிட்ட கார் நிறுவனங்கள் ஒரு லட்சம் வரையிலான சலுகைகளை வழங்குகின்றது.

ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு கிடைத்த அமோக வரவேற்பு, பிற நிறுவனங்களுக்கு நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது. கடந்த ஜூலை 21-ல், விற்பனைக்கு வந்த இந்த க்ரெட்டாவின் அறிமுகத்திற்கான முந்தைய காலகட்டத்திலேயே 10,000 புக்கிங்கள் கிடைத்திருந்தது. தற்போது, க்ரெட்டாவிற்கு 40,000 புக்கிங்கள் கிடைத்துள்ளது. இத்தகைய அதிக அளவிலான தேவையை பூர்த்தி செய்வதில் ஹுண்டாய் நிறுவனத்திற்கு அழுத்தம் உள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டாவின் டீசல் வேரியண்ட்களை காட்டிலும், பெட்ரோல் வேரியண்ட்களில் அதிக கார் ரகங்கள் உள்ளது. ஈர்க்ககூடிய ஆஃபர்களுடன், நல்ல வடிவமைப்பு மற்றும் நல்ல செயல்திறன் கொண்ட க்ரெட்டா போன்ற காருக்கு மக்களிடம் வரவேற்பு இருப்பது சகஜம் தான்.

தற்போதைய தகவல்களின் படி, க்ரெட்டாவின் பெட்ரோல் ரக கார்களுக்கான காத்திருப்பு காலம் மூன்று முதல் நான்கு மாதங்களாக உள்ளது. டீசல் ரக கார்களுக்கான காத்திருப்பு காலம் ஆறு முதல் எட்டு மாதங்களாக உள்ளது.

இத்தகைய நீண்ட காத்திருப்பு கால இடைவெளிகளுக்கு மத்தியில், க்ரெட்டா ஆட்டோமேட்டிக் வாடிக்கையாளர்களை ஹுண்டாய் நிறுவனம் எப்படி தக்கவைத்து கொள்ள உள்ளது என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஹுண்டாய் இந்தியா நிறுவனத்தின் கார் தயாரிப்புகளின் விற்பனை 6 மில்லியனை தாண்டியுள்ளதாக அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் செய்திகள் வெளியிடப்பட்டது. இது ஹுண்டாய் தயாரிப்புகளுக்கு மக்களிடையே பெருகி கொண்டே இருக்கும் ஆதரவை காட்டுகிறது.

English summary
Hyundai Creta Automatic cars comes with 6 Months Waiting period.
Please Wait while comments are loading...

Latest Photos