இந்தியாவில் ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் வெளியானது!

By Saravana

நம் நாட்டில், விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் புதிய ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் விபரம் வெளியாகியுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா என்ற பெயரில் இந்த புதிய ஹூண்டாய் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. நம்மிடையே பேராவலை ஏற்படுத்தியிருக்கும் இந்த புதிய எஸ்யூவி பற்றிய சில முக்கியத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

சமீபத்தில் சீனாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹூண்டாய் ஐஎக்ஸ்25 எஸ்யூவியின் அடிப்படையில், இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை வடிவமைத்துள்ளதாக ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 வடிவமைப்பு செலவீனம்

வடிவமைப்பு செலவீனம்

உலகளாவிய அளவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ள இந்த புதிய ஹூண்டாயய் காம்பேக்ட் எஸ்யூவி ரூ.1,000 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் புளூயிடிக் ஸ்கல்ப்ச்சர் 2.0 டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்ட்டுள்ளது. சான்டா ஃபீ எஸ்யூவியின் டிசைன் அம்சங்களையும் இந்த எஸ்யூவியில் பயன்படுத்தியுள்ளனர்.

 சென்னையில் உற்பத்தி

சென்னையில் உற்பத்தி

சென்னையிலுள்ள ஹூண்டாய் ஆலையில் இந்த புதிய எஸ்யூவி உற்பத்தி செய்யபப்பட உள்ளது. இந்த புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு 90 சதவீத பாகங்கள் இந்தியாவிலேயே பெற்று அசெம்பிள் செய்யப்பட உள்ளது. இதன்காரணமாக, சவாலான விலையில் இந்த புதிய மாடலை ஹூண்டாய் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெயர்

பெயர்

சீனாவில் மட்டும்தான் ஐஎக்ஸ்25 என்ற பெயர் பயன்படுத்தப்படும். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் க்ரெட்டா என்ற பெயரில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

இதர தகவல்கள்

இதர தகவல்கள்

பெட்ரோல், டீசல் மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களிலும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துகொள்ளும் வாய்ப்பை ஹூண்டாய் வழங்கும்.

ஏற்றுமதி

ஏற்றுமதி

சென்னையில் உற்பத்தி செய்யப்பட இருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியை பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. முதலில் தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

 போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

ரெனோ டஸ்ட்டர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட அடக்கமான வகை எஸ்யூவி மாடல்களுக்கு இது போட்டியாக இருக்கும். ரூ.7.5 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான விலைப்பட்டியலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Hyundai India has showcased its ix25 compact SUV on several occasions at various motor shows. They have now decided to provide its offering with a name and have christened it ‘Creta'. well as international markets. Production version of Creta compact SUV will make its global debut in India, just like they did with i20 Active and Elite i20.
Story first published: Tuesday, June 2, 2015, 11:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X