ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி, 75,000 புக்கிங்குகளை கடந்து சாதனை

By Ravichandran

விற்பனைக்கு வந்த தினத்திலிருந்து இதுவரை ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி 75,000 புக்கிங்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

பல்வேறு நிறுவனங்கள் கார்களை அறிமுகம் செய்து கொண்டே இருந்தாலும், ஒரு சில கார்கள், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறது. இப்படி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ஹூண்டாய் க்ரெட்டா பற்றி வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

அபார வரவேற்பு;

அபார வரவேற்பு;

ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி சுமார் 5 மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யபட்டது. கொரிய நிறுவனமான ஹூண்டாய், இது வரை, 75,000 புக்கிங்களை பதிவு செய்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு விற்பனை அதிகமாக இருக்கும் என ஹூண்டாய் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

வெளிநாடுகளிலும் அபார விற்பனை;

வெளிநாடுகளிலும் அபார விற்பனை;

ஹூண்டாய் க்ரெட்டா காரின் உலகளாவிய அறிமுகம் இந்தியாவில் நடத்தபட்டது. இங்கு தயாரிக்கபடும் க்ரெட்டா உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபடுகிறது.

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு, இந்தியா மிக பெரிய சந்தையாக விளங்குகிறது. அதன் மொத்த விற்பனையில், 14 % இந்தியாவில் இருந்து ஆகிறது. பிரேசில், சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் ஹூண்டாய்-க்கு முக்கிய சந்தையாக உள்ளது. ஆனால், சமீப காலமாக இந்த நாடுகளில் அதன் விற்பனை குறைந்து கொண்டே இருக்கின்றது.

விரிவடையும் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்;

விரிவடையும் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்;

காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட், இந்தியாவில் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இதனால் பல்வேறு உற்பத்தியாளர்கள் இந்த செக்மெண்டில் தடம் பதிக்க விரும்புகின்றன.

சர்வதேச சந்தைகளுக்கும், க்ரெட்டா-வை பிரிமியம் காம்பேக்ட் எஸ்யூவியாகவே ஹூண்டாய் முன் நிறுத்தி விற்பனை செய்து வருகின்றது.

க்ரெட்டா-விற்கான அனுகூலங்கள்;

க்ரெட்டா-விற்கான அனுகூலங்கள்;

மற்ற போட்டி கார்களை காட்டிலும், ஹூண்டாய் க்ரெட்டா-விற்கு சில முக்கிய அனுகூலங்கள் உள்ளன. இந்த காம்பேக்ட் எஸ்யூவி, டீசல் இஞ்ஜினுடன் ஒரு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் கொண்டுள்ளது.

கிரெட்டா எஸ்யூவி, பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் உள்ளிட்ட தேர்வுகளில் கிடைக்கின்றது. மேலும், இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் கிடைக்கின்றது.

ஒட்டுமொத்த விற்பனையும் அதிகரிக்க வாய்ப்பு;

ஒட்டுமொத்த விற்பனையும் அதிகரிக்க வாய்ப்பு;

ஹூண்டாய் நிறுவனம், 2015-ஆம் ஆண்டில் அதிக அளவிலான விற்பனை பதிவு செய்யும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்தியாவில் ஏராளமான மாடல்களை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதால், அதன் ஒட்டு மொத்த விற்பனை இந்தியாவில் அதிக அளவில் கூடியுள்ளது.

வருங்கால அறிமுகங்கள்;

வருங்கால அறிமுகங்கள்;

கொரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், 2016-ஆம் ஆண்டில் ஏராளமான புதிய தயாரிப்புகளை வரும் 2016-ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளதாக எதிர்பார்க்கபடுகிறது.

ஹூண்டாய் நிறுவனம், ஒரு சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு அமோக வரவேற்பு : 70,000 மேற்பட்ட புக்கிங்குகளை அள்ளியது

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு 27,000 புக்கிங்... தலைகால் புரியா சந்தோஷத்தில் ஹூண்டாய்

10,000 முன்பதிவுகளை அள்ளிய புதிய ஹூண்டாய் க்ரெட்டா... ஷாக்காகி நிற்கும் டஸ்ட்டர்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

More from DriveSpark

Article Published On: Tuesday, December 29, 2015, 10:26 [IST]
English summary
Hyundai Creta has registered over 75,000 Bookings In India Within 5 Months. Hyundai Creta compact SUV made its global debut in India. Creta SUV made in India, is exported to several countries. India is very big market for Hyundai Motors. Around 14 percent out of the total sales od Hyundai is from India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+