புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியீடு!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மொத்தம் மூன்றுவிதமான எஞ்சின் ஆப்ஷன்களிலும், வசதிகளுக்கு ஏற்ப 4 வேரியண்ட்டுகளிலும் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

புளுயிடிக் டிசைன்
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புளுயிடிக் ஸ்கல்ப்ச்சர் 2.0 டிசைன் கொள்கையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எலைட் ஐ20 கார் வடிவமைக்கப்பட்டிருக்கும் அதே பிளாட்ஃபார்மில்தான் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

எஞ்சின் ஆப்ஷன்கள்
இரண்டு டீசல், ஒரு பெட்ரோல் என மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் வெளிவருகிறது. அதிகபட்சமாக 123 பிஎஸ் பவரை வழங்க வல்ல 1.6 லிட்டர் விடிவிடி பெட்ரோல் எஞ்சின், 128 பிஎஸ் பவரை அளிக்க வல்ல 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 1.6 லிட்டர் டீசல் மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் கிடைக்கும்.

வேரியண்ட்டுகள்
புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி பேஸ், எஸ், எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் ஆகிய வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வருகிறது. டாப் வேரியண்ட்டில் எல்இடி பகல்நேர விளக்குகள், 17 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன.

முதலீடு
இந்த புதிய மாடலை உருவாக்குவதற்காக ரூ.1,000 கோடியை ஹூண்டாய் மோட்டார்ஸ் முதலீடு செய்துள்ளது. சென்னையிலுள்ள ஹூண்டாய் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கும் இந்த எஸ்யூவிக்கு 90 சதவீத உதிரிபாகங்கள் உள்நாட்டிலேயே பெற இருப்பதால், சவாலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்றுமதி
ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி சென்னையிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

விலை மட்டுமே...
இந்த எஸ்யூவியின் விலை விபரம் அடுத்த மாதம் 21ந் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. ரெனோ டஸ்ட்டர், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ போன்ற மாடல்களுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








