ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு அமோக வரவேற்பு : 70,000 மேற்பட்ட புக்கிங்குகளை அள்ளியது!

Written By:

ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா கார், 70,000 மேற்பட்ட புக்கிங்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா எஸ்யூவி, துவக்கத்தில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. ஹூண்டாய் க்ரெட்டா அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே 10,000 கார்கள் புக்கிங் செய்யப்பட்டிருந்தது.

அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி;

அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி;

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு பலத்த வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இப்போதைய நிலையில், ஹூண்டாய் க்ரெட்டா தான், இந்தியாவில் அளவில் மிக அதிகமாக விற்பனையாகும் எஸ்.யூ.வி-யாக உள்ளது.

தற்போது வரை, 70,000 புக்கிங்களை பெற்றுள்ளது. இது வரை, 3,40,000 பேர், க்ரெட்டா காரை பற்றி விசாரணை செய்துள்ளனர். மேலும், உலக அளவில் 15,770 ஆர்டர்களை பெற்றுள்ளது.

புதிய அளவுகோள்;

புதிய அளவுகோள்;

ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா எஸ்யூவி கார்களுக்கு என புதிய குறியீடுகளை நிர்ணயம் செய்து வருகின்றது.

க்ரெட்டா எஸ்யூவியின் அறிமுகத்தை அடுத்து, ஹூண்டாய் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு கூடி உள்ளது என்றால், அது மிகையாகாது.

இந்தியாவின் எஸ்யூவி செக்மண்டில், ஹூண்டாய் நிறுவனம் தங்களுக்கு என தனி இடம் பிடித்துவிட்டது. மேலும், உலக தரங்களுக்கான எதிர்பார்ப்புகளின் அளவுக்கு ஏற்றவாறு, இந்தியாவில் தயாரிக்கபடும் பொருட்கள் (‘மேட் இன் இந்தியா') இருப்பதை உறுதி செய்து வருகின்றது.

அயல்நாட்டு சந்தைகளில் சிறந்த வரவேற்பு;

அயல்நாட்டு சந்தைகளில் சிறந்த வரவேற்பு;

ஹூண்டாய் க்ரெட்டா, இந்தியா மற்றும் அயல்நாட்டு சந்தைகளில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது.

க்ரெட்டா கார், லத்தின் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா, கோஸ்டா ரிக்கா, பெரு மற்றும் பனாமா போன்ற நாடுகளிலும், மத்திய கிழக்கு பகுதியில் ஒமான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும், ஆஃப்ரிக்கா பகுதியில் எகிப்து, மொராக்கோ, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் அமோக வரவேற்ப்பை பெற்று வருகின்றது.

இதோடு மட்டுமல்லாமல், க்ரெட்டா காரின் நல்ல விற்பனை மூலம் மற்றும் கூடி வரும் நற்பெயர் மூலம், இன்னும் புதிய சந்தைகளில் அதன் விற்பனையை விரிவு படுத்த ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

கிடைக்கும் இஞ்ஜின் விதங்கள்;

கிடைக்கும் இஞ்ஜின் விதங்கள்;

ஹூண்டாய் க்ரெட்டா, 3 விதமான இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

1.6 காமா ட்யூவல் விடிவிடி, 1.6 யூ2 சிஆர்டிஐ விஜிடி, 1.4 யூ2 சிஆர்டிஐ என்கின்ற 3 விதமான இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கின்றது.

டிசைன் தத்துவம்;

டிசைன் தத்துவம்;

ஹூண்டாய் மோட்டார், ஃப்ளூயிடிக் ஸ்கல்ப்சர் 2.0 டிசைன் தாத்பரியம் கொண்டு பரிணாமம் அடைந்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா கார், இயக்க ஆற்றல், சொகுசு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில், இந்திய வாகன சந்தையில் சிறந்த வாகனமாக விளங்குகின்றது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹூண்டாய் க்ரெட்டா குறித்த மேற்பட்ட தொடர்புடைய செய்திகளை காண;

ஹூண்டாய் க்ரெட்டா காரின் விலை உயர்வு - புதிய விலை விபரம்

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு 27,000 புக்கிங்... தலைகால் புரியா சந்தோஷத்தில் ஹூண்டாய்!

10,000 முன்பதிவுகளை அள்ளிய புதிய ஹூண்டாய் க்ரெட்டா... ஷாக்காகி நிற்கும் டஸ்ட்டர்!

English summary
Hyundai Creta bagged over 70,000 + bookings in India. Hyundai Creta was launched in this July. Hyundai Motor India Limited declared that, Hyundai Creta has gathered 70,000 bookings in India. Apart from that, the near perfect SUV has got 3,40,000 enquiries in India and over 15,770 orders globally.
Story first published: Wednesday, November 25, 2015, 9:51 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more