இந்த ஆண்டின் இந்தியாவின் சிறந்த கார் விருதை வென்ற ஹூண்டாய் க்ரெட்டா!
இந்த ஆண்டின் இந்தியாவின் சிறந்த கார் விருதை ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி பெற்றிருக்கிறது. மேலும், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு இந்த பெருமைமிகு விருதை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல தயாரிப்புகளுக்கு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும், விருதுகள் வழங்கி கௌரவபடுத்துவது வழக்கம். ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி பெற்றுள்ள இந்த விருது குறித்த செய்தியினை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்வோம்.

தொடர்ந்து 3-வது முறை பதக்கம்;
ஹூண்டாய் நிறுவனம், 2014, 2015, 2016 என தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த இந்தியன் கார் ஆஃப் தி இயர் விருதை வென்றுள்ளது.
2014-ஆம் ஆண்டிற்கான இந்தியன் கார் ஆஃப் தி இயர் விருதை, கிராண்ட் ஐ10 காருக்காக ஹூண்டாய் நிறுவனம் பெற்றது.
2015-ஆம் ஆண்டிற்கான இந்தியன் கார் ஆஃப் தி இயர் விருதை, எலைட் ஐ20 காருக்காக ஹூண்டாய் நிறுவனம் வென்றது.
2015-ஆம் ஆண்டிற்கான இந்தியன் கார் ஆஃப் தி இயர் விருதை, க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி-காக மீண்டும் ஹூண்டாய் நிறுவனமே வென்றுள்ளது.

தேர்வு குழு;
இந்த ஆண்டிற்கான இந்தியன் கார் ஆஃப் தி இயர் விருதை தீர்மாணம் செய்ய 14 பேர் கொண்ட குழு அமைக்கபட்டது. இந்த குழு கடைசியில், விருதை ஹூண்டாய் நிறுவனத்திற்கு வழங்கியது.

மகிழ்ச்சியுடன் விருது ஏற்பு;
இந்தியன் கார் ஆஃப் தி இயர் விருதை, ஹூண்டாய் மோட்டார் இந்தியாலிமிடெட் நிறுவனத்தின் எம்டி மற்றும் சீஈஓ-வான ஒய்.கே. கூ மற்றும் அந்நிறுவனத்தின் உயர் அதிகாரியான ராகேஷ் ஸ்ரீவாத்ஸவா-வும் பெற்றனர்.
கௌரவம் மிக்க இந்த விருது தன்னை, இருவரும் பெறுமையுடன் பெற்றனர்.

புக்கிங்-களிலும் சாதனை;
ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி வெரும் விருதுகள் மற்றும் பெற்றிருக்கவில்லை. மக்களின் மனங்களிலும் இடம் பிடித்துள்ளது.
செக்மண்ட் லீடர் எனப்படும், அதன் செக்மண்ட்-டில் முன்னோடியாகவும் விளங்குகிறது.
இது ஹூண்டாய் க்ரெட்டா, சுமார் 74,000 புக்கிங்-களை பெற்றுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், ஜூலை 2015 முதல் தற்போது வரை, 4,00,000 விசாரணைகள் (என்குவயரிகள்) பெற்றுள்ளது.

சிறப்பம்சங்கள்;
வடிவமைப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை முக்கியமாக மனதில் வைத்தே க்ரெட்டா எஸ்யூவியை ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
க்ரெட்டா எஸ்யூவி முதற்கட்டமாக அறிமுகம் செய்யபட்டாலும், இது உன்மையிலேயே உலகளாவிய தயாரிப்பு என்றால் அது மிகையாகாது.
ஹூண்டாய் நிறுவனம் தங்களின் அனைத்து வாகனங்களையும் ஃப்யூசரிஸ்டிக் டிசைன் ஃபிலாசஃபி எனப்படும் வருங்கால வடிவமைப்பு சித்தாந்தத்தை மனதில் வைத்து உருவாக்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
க்ராஷ் டெஸ்ட்டில் 'மேட் இன் இந்தியா' ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு 4 ஸ்டார் ரேட்டிங்!
ரூ.8.59 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு வந்தது
புதிய ஹூண்டாய் க்ரெட்டா வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்


Click it and Unblock the Notifications








