புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் விற்பனைக்கு வந்தது - விபரம்

By Saravana

மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் எலான்ட்ரா கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தென்கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர், இந்தியா வந்திருக்கும் இந்த புதிய எலான்ட்ரா மாடல், ஹூண்டாய் நிறுவனத்தின் 3டி கொள்கையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயல்திறன், டிசைன் மற்றும் ஓட்டுதல் தரத்தில் மிகச்சிறப்பான அனுபவத்தை இந்த புதிய மாடல் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மாடல் அறிமுகம் குறித்து ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பி.எஸ்.சியோ கூறுகையில்," பிரிமியம் செடான் செக்மென்ட்டில் ஹூண்டாய் எலான்ட்ரா எப்போதுமே முன்மாதிரி மாடலாக விளங்குகிறது. அதனை மீண்டும் உறுதி செய்யும் விதத்தில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளோம்," என்று கூறினார். காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்களின் விபரங்கள் ஸ்லைடரில் உள்ளன.

டிசைன் அம்சங்கள்

டிசைன் அம்சங்கள்

முன்புறத்தில் குரோம் பூச்சுடன் கூடிய புதிய கிரில் அமைப்பு, புதிய பனி விளக்குகள் டிசைன் போன்றவை காரின் அழகை கூட்டுகிறது. புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி கெய்டு லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய 10 ஸ்போக்குகள் கொண்ட 16 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் மற்றும் இரட்டை வண்ண பம்பர் கவர்ச்சியை தருகிறது.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா மாடலில் 147 எச்பி பவரையும், 177 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.8 லிட்டர் விடிவிடி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, டீசல் மாடலில் 126 எச்பி பவரையும், 259 என்எம் டார்க்கையும் வழங்கும் சிஆர்டிஐ எஞ்சின் உள்ளது. பெட்ரோல், டீசல் என இரண்டு மாடல்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் மாடலை பொறுத்தவரை மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 16.3 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 14.34 கிமீ மைலேஜையும் தரும். டீசல் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 22.7 கிமீ மைலேஜையும், பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 19.11 கிமீ மைலேஜையும் தரும் என்று ஹூண்டாய் தெரிவிக்கிறது.

 வண்ணங்கள்

வண்ணங்கள்

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் 6 வண்ணங்களில் கிடைக்கும். கருப்பு வண்ண இன்டிரியர் மூலம் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது.

 முக்கிய வசதிகள்

முக்கிய வசதிகள்

தகவல்களையும், பொழுதுபோக்கு வசதிகளையும் ஒருங்கே தரும் டிஎஃப்டி டிஸ்ப்ளேயுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கீ, சூப்பர்விஷன் க்ளஸ்ட்டர், ரியர் ஏசி வென்ட் போன்றவை முக்கிய வசதிகளாக இருக்கின்றன.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், இபிடி.,யுடன் கூடிய ஆன்ட்டி பிரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள், ரியர் வியூ கேமரா மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகிய பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது.

விலை

விலை

பெட்ரோல்

எலான்ட்ரா எஸ்: ரூ.14.13 லட்சம்

எலான்ட்ரா எஸ்எக்ஸ்: ரூ. 15.41 லட்சம்

எலான்ட்ரா எஸ்எக்ஸ் ஏடி: ரூ. 16.49 லட்சம்

டீசல்

எலான்ட்ரா பேஸ் மாடல்: ரூ.14.57 லட்சம்.

எலான்ட்ரா எஸ்: ரூ.15.35 லட்சம்

எலான்ட்ரா எஸ்எக்ஸ்: ரூ.16.67 லட்சம்

எலான்ட்ரா ஏடி: ரூ.17.94 லட்சம்

அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை.

More from DriveSpark

Article Published On: Thursday, April 23, 2015, 10:03 [IST]
English summary
Hyundai has launched its all-new 2015 Elantra in India on 20th of April, 2015. This new model follows the Korean manufacturers new philosophy of 3D- Delightful performance, Design finesse and Driving pleasure.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+