ஆடியோ,வீடியோ நேவிகேஷனுடன் ஹூண்டாய் எலைட் ஐ20 கார்!

By Saravana

ஹூண்டாய் கார்களில் எப்போதுமே வசதிகளுக்கு குறைவிருக்காது. மார்க்கெட்டில் இருக்கும் கார்களைவிட கூடுதல் வசதிகள் இருக்குமாறு தனது மாடல்களை ஹூண்டாய் முன்னிறுத்தி வருகிறது.

அந்த வகையில், இப்போது ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் ஐ20 ஆக்டிவ் ஆகிய மாடல்களில் புதிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை சேர்த்திருக்கிறது. இந்த புதிய சிஸ்டத்தின் மூலம் பெறக்கூடிய வசதிகள் விபரத்தை ஸ்லைடரில் காணலாம்.

 தொடுதிரை சாதனம்

தொடுதிரை சாதனம்

ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் ஐ20 ஆக்டிவ் கார் மாடல்களில் 7 இன்ச் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது. அதாவது, பயணத்திற்கு தேவையான தகவல்களையும், வழிகாட்டு வசதியையும் அளிக்கும் ஆடியோ, வீடியோ நேவிகேஷன் முக்கிய வசதியாக சேர்க்கப்பட்டுள்ளது.

நேவிகேஷன் சாதனம்

நேவிகேஷன் சாதனம்

புதிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்தில் இருக்கும் ஆடியோ வீடியோ நேவிகேஷன் சாதனம் மிகச்சிறப்பான வசதிகளை வழங்கும். சேட்டிலைட் நேவிகேஷன் வசதியும், வாய்மொழி உத்தரவு வாயிலாக நேவிகேஷன் சாதனத்தை கட்டுப்படுத்தவும் முடியும்.

மொபைல்போன் இணைப்பு

மொபைல்போன் இணைப்பு

புளூடூத் கனெக்ட்டிவிட்டி மூலமாக மொபைல்போனை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைத்துக் கொண்டு வாய்மொழி உத்தரவு மூலமாக போன் அழைப்புகளை பெறுவதற்கும், அழைப்பதற்கும் முடியும். இது கார் ஓட்டும்போது ஏற்படும் கவனச் சிதறலை தவிர்க்க உதவும்.

ரியர் வியூ கேமரா இணைப்பு

ரியர் வியூ கேமரா இணைப்பு

அத்துடன் பொழுதுபோக்கு வசதிகளையும் இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் மூலமாக பெற முடியும் என்பதோடு, ரியர் வியூ கேமராவிற்கான திரையாகவும் இது செயல்படும். ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் ஐ20 ஆக்டிவ் கார்களின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் இந்த வசதி கிடைக்கும். அதேநேரத்தில், டாப் வேரியண்ட்டில் மட்டுமே இந்த சாதனத்தை பெற முடியும்.

வேரியண்ட் மற்றும் விலை விபரம்

வேரியண்ட் மற்றும் விலை விபரம்

  • ஹூண்டாய் எலைட் ஐ20 அஸ்டா ஆப்ஷனல் பெட்ரோல்: ரூ.7,16,547
  • ஹூண்டாய் எலைட் ஐ20 அஸ்டா ஆப்ஷனல் டீசல்: ரூ.8,28,496
  • ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் எஸ்எக்ஸ் பெட்ரோல்: ரூ.7,92,045
  • ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் எஸ்எக்ஸ் டீசல்: ரூ.9,16,685
Most Read Articles
English summary
Hyundai motors has introduced the Audio Video Navigation system in the i20 and the i20 Active models in India.
Story first published: Thursday, September 3, 2015, 11:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X