ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் க்ராஸ்ஓவர் மாடல் அறிமுகம் - விபரம்!

By Saravana

ஹேட்ச்பேக் கார்களில் சிறிய மாற்றங்களையும், கூடுதல் ஆக்சஸெரீகளையும் சேர்த்து க்ராஸ்ஓவர் ரக மாடலாக அறிமுகம் செய்வது இப்போது புதிய ட்ரெண்ட்டாக மாறியிருக்கிறது. அந்தவகையில், ஃபோக்ஸ்வேகன் க்ராஸ் போலோ, டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ், ஃபியட் அவென்ச்சுரா, ஹூண்டாய் ஐ20 க்ராஸ் உள்ளிட்ட மாடல்கள் நம் நாட்டு மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த நிலையில், இந்தோனேஷியாவில், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் அடிப்படையிலான புதிய க்ராஸ்ஓவர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படங்கள், கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பெயர்

பெயர்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10எக்ஸ் என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

காரை சுற்றிலும் பிளாஸ்டிக் கிளாடிங்குகள் கொடுக்கப்பட்டிருப்பதால், இது க்ராஸ்ஓவர் தோற்றத்தை பெற்றிருக்கிறது. புதிய அலாய் வீல்கள், ஸ்கிட் பிளேட், பனி விளக்குகள், எல்இடி பகல்நேர விளக்குகள் போன்றவையும் வெளிப்புறத் தோற்றத்திற்கு வலு சேர்க்கும் அம்சங்கள்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10எக்ஸ் காரில் 81.83 எச்பி பவரையும், 116 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

மேட் இன் சென்னை

மேட் இன் சென்னை

இந்தோனேஷியாவில் விற்பனைக்கு சென்றிருக்கும், புதிய ஹூண்டாய் ஐ10எக்ஸ் கார் சென்னையிலுள்ள ஹூண்டாய் ஆலையில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, இந்தியாவிலும் விரைவில் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

விலை

விலை

இந்திய மதிப்பில் ரூ.7.46 லட்சம் விலையில் இந்தோனேஷியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10எக்ஸ்.

More from DriveSpark

Article Published On: Monday, June 15, 2015, 9:56 [IST]
English summary
Now the Korean manufacturer Hyundai has introduced an all-new derivative of its Grand i10 model. In Indonesia Hyundai has launched a crossover model called Grand i10x with attractive features.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+