கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஹூண்டாய் எலைட் ஐ20 ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

Written By:

ஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ20 காரின் ஸ்பெஷல் எடிஷன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு விருதுகளை வென்ற ஹூண்டாய் ஐ20 கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. அதன் முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக ஹூண்டாய் ஐ20 ஸ்பெஷல் எடிஷன் மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

Hyundai i20 Special Edition Launched

ஹூண்டாய் எலைட் ஐ20 ஸ்பெஷல் எடிஷன் மாடல், அந்த காரின் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் பெட்ரோல் வேரியண்ட் 6.69 லட்ச ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் கிடைகின்றது. இதன் டீசல் வேரியண்ட் 7.84 லட்ச ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் கிடைக்கின்றது.

இந்த ஹூண்டாய் எலைட் ஐ20 ஸ்பெஷல் எடிஷன் காரில் 1.2 லிட்டர் கப்பா டியூவல் விடிவிடி பெட்ரோல் இஞ்ஜினையே கொண்டுள்ளது. இது 83 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும்.

இந்த ஐ20 ஸ்பெஷல் எடிஷன் காரின் டீசல் மாடலில் இருக்கும் எஞ்சின் அதிகபட்சமாக, 83 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் யூ2 சிஆர்டிஐ இஞ்ஜினை கொண்டுள்ளது.

இந்த ஐ20 ஸ்பெஷல் எடிஷன் கார் போலார் வெள்ளை நிறத்தில் பாடி கிராஃபிக்ஸுசன் வருகின்றது. இது 16-இஞ்ச் டைமண்ட்-கட் அல்லாய் சக்கரங்கள், அலுமினியம் பெடல்கள், பூட்-லிட்டில் ஸ்பெஷல் எடிஷன் கார் என குறிக்கும் வகையிலான முத்திரை, மற்றும் பல்வேறு விதமான அழகு கூட்டும் அம்சங்களுடன் கிடைக்கின்றது.

English summary
Hyundai i20 Special Edition Cars are Launched at 6.69 Lakh Rupees Price. This Special Edition Cars are launched to celebrate the anniversary of the Launch of Hyundai i20 Cars.
Story first published: Friday, October 16, 2015, 18:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark