ஹூண்டாய் நிறுவனத்தின் ‘டிசம்பர் டிலைட்’ கொண்டாட்ட சலுகைகள்

Written By:

ஹூண்டாய் இந்தியா நிறுவனம், 'டிசம்பர் டிலைட்' என்ற பெயரில், வாடிக்கையாளர்களுக்கும் ஏராளமான சலுகைகளை வழங்கி வருகின்றது.

வருடம் முடிவடையும் தருனத்தில், இந்திய நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் பல்வேறு விதமான சலுகைகளை வழங்குகின்றனர். ஹூண்டாய் நிறுவனம், எந்த மாடல்கள் மீது எப்படிபட்ட வழங்குகின்றது என்பதை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்வோம்.

வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் லாபம்;

வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் லாபம்;

‘டிசம்பர் டிலைட்' என்ற பெயரில், 7 கார்கள் மீது வழங்கப்படும் சலுகைகள் மூலம், 70,000 ரூபாய் வரையிலான ஆஃபர்கள் வழங்கபடுகிறது.

சலுகைகள் கிடைக்கும் நாட்கள்;

சலுகைகள் கிடைக்கும் நாட்கள்;

ஹூண்டாய் நிறுவனம் வழங்கும் ‘டிசம்பர் டிலைட்' சலுகைகள், டிசம்பர் 31, 2015-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு கார்களை வாங்கினால் மட்டுமே கிடைக்கும்.

என்ன கார்களுக்கு என்ன சலுகைகள் - 1;

என்ன கார்களுக்கு என்ன சலுகைகள் - 1;

எந்த ஹூண்டாய் மாடல்கள் மீது என்ன சலுகைகள் கிடைக்கிறது என விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஹூண்டாய் இயான் பெட்ரோல் மாடல் - ஆரம்ப விலை - 3.1 லட்சம் ரூபாய் - 44,000 ரூபாய் வரை சேமிக்கலாம்

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் பெட்ரோல் மாடல் - ஆரம்ப விலை - 5.18 லட்சம் ரூபாய் - பெட்ரோல் மாடல் மற்றும் டீசல் மாடல்கள் மீது 55,000 ரூபாய் வரை சேமிக்கலாம்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 பெட்ரோல் மாடல் - ஆரம்ப விலை - 4.96 லட்சம் ரூபாய் - பெட்ரோல் மாடல் மற்றும் டீசல் மாடல்கள் மீது 55,000 ரூபாய் வரை சேமிக்கலாம்

குறிப்பு ; அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலைகள் ஆகும்

என்ன கார்களுக்கு என்ன சலுகைகள் - 2;

என்ன கார்களுக்கு என்ன சலுகைகள் - 2;

ஹூண்டாய் வெர்னா பெட்ரோல் மாடல் - ஆரம்ப விலை - 4.96 லட்சம் ரூபாய் - பெட்ரோல் மாடல் மற்றும் டீசல் மாடல்கள் மீது 65,000 ரூபாய் வரை சேமிக்கலாம்

ஹூண்டாய் ஐ10 பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மாடல்கள் - 50,000 ரூபாய் வரை சேமிக்கலாம்

ஹூண்டாய் எலன்ட்ரா - பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் - 60,000 ரூபாய் வரை சேமிக்கலாம்

ஹூண்டாய் சான்ட்டா பீ - 70,000 ரூபாய் வரை சேமிக்கலாம்

குறிப்பு ; அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலைகள் ஆகும்

சலுகைகள் கிடைக்காத கார்கள்;

சலுகைகள் கிடைக்காத கார்கள்;

ஹூண்டாய் நிறுவனத்தால் புதிதாக அறிமுகம் செய்யபட்டுள்ள கிரேட்டா காம்பேக்ட் எஸ்யூவி, எலைட் ஐ20 பிரிமியம் ஹேட்ச்பேக் மற்றும் ஐ20 பிரிமியம் ஹேட்ச்பேக் உள்ளிட்ட கார்கள் இந்த ‘டிசம்பர் டிலைட்' சலுகைகளில் சேர்த்து கொள்ளபடவில்லை.

இந்த 3 மாடல்களும், எந்த விதமான சலுகைகளும் வழங்கபடாமலேயே நன்றாக விற்பனை ஆகி கொண்டிருப்பதால், இவற்றின் மீது எந்த ஆஃபர்களும் வழங்கபடவில்லை என அறிவிக்கபட்டுள்ளது.

ஃபைனான்ஸ் தேர்வுகளுக்கும் சலுகைகள்;

ஃபைனான்ஸ் தேர்வுகளுக்கும் சலுகைகள்;

ஹூண்டாய் நிறுவன தயாரிப்புகளை வாங்க, ஃபைனான்ஸ் வாய்ப்புகளுக்கு தேர்வு செய்பவர்களுக்கு, ஸீரோ டவுன் பேமண்ட் முறையில், ஃபைனான்ஸ் வசதிகள் கிடைக்கும்.

கூடுதல் சலுகைகள்;

கூடுதல் சலுகைகள்;

ஹூண்டாய் நிறுவனம் வழங்கும் ‘டிசம்பர் டிலைட்' சலுகைகளின் பட்டியல் இதோடு நிற்கவில்லை.

ஹூண்டாய் நிறுவனத்தின் எந்த காரை வாங்கினாலும், 3-வது வருட வாரண்டி இலவசமாக வழங்கபடுகிறது என்பது குறிப்பிடதக்கது.

English summary
Hyundai India Introduces the December Delight On Seven Models of its Cars. Hyundai Motors India has begun this year-end discount and benefit bash for its customers. 7 Car models from Hyundai are being offered at very attractive prices, and savings of up to Rs. 70,000 can be done through their purchases.
Story first published: Wednesday, December 9, 2015, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark