மார்ச்சில் விற்பனைக்கு வருகிறது புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ்!

By Saravana

அடுத்த மாதம் ஹூண்டாய் கார் நிறுவனத்தின் புதிய க்ராஸ்ஓவர் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் அடிப்படையில் ஐ20 ஆக்டிவ் என்ற புதிய க்ராஸ்ஓவர் மாடலை ஹூண்டாய் வடிவமைத்துள்ளது. ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீகள், அதிக கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டதாக இந்த கார் வர இருக்கிறது.

Hyundai i20 Active

ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் ஜெர்மனியிலுள்ள டிசைன் மையத்தில் இந்த கார் வடிவமைப்பு பெற்றுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் இந்த காரின் அதிகாரப்பூர்வமான ஸ்கெட்ச் படங்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

இந்தநிலையில், மார்ச்சில் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது உறுதியாகியுள்ளது. எலைட் ஐ20 காருக்கு கிடைத்த வரவேற்பை போன்றே இந்த காருக்கும் நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும் என்று ஹூண்டாய் கருதுகிறது.

புதிதாக முளைத்த ஹேட்ச்பேக் க்ராஸ்ஓவர் ரகத்தில் விற்பனையில் இருக்கும் டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ், ஃபியட் அவென்ச்சுரா மற்றும் ஃபோக்ஸ்வேகன் க்ராஸ் போலோ கார்களுக்கு இது நேரடி போட்டியாக வர இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 28, 2015, 11:40 [IST]
English summary
South Korean car maker Hyundai motors will make the global debut of its new crossover model, i20 Active in India next month.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+