ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய சொகுசு கார் பிராண்டு அறிமுகம்

Written By:

சொகுசு கார்களுக்கான பிரத்யேகமான புதிய கார் பிராண்டை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பெருகி வரும் வாகன சந்தையில், சர்வதேச அளவில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டிகளை சமாளிக்க ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.

ஹூண்டாய் கார் நிறுவனம், தங்கள் நிறுவனம் சார்பாக ஜெனிஸிஸ் என்னும் புதிய சொகுசு கார் பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த பிராண்டின் நோக்கமே வாடிக்கையாளர்களை மையபடுத்திய சொகுசு அம்சங்களை கொண்ட கார்களை வடிவமைப்பதே ஆகும்.

ஜெனிஸிஸ் பிராண்டின் சிறப்பம்சங்கள்;

ஜெனிஸிஸ் பிராண்டின் சிறப்பம்சங்கள்;

ஜெனிஸிஸ் பிராண்ட் பெயர் கொண்டு, உருவாக்கப்பட உள்ள புதிய மாடல் கார்கள், மிக உயரிய தரத்திலான வடிவமைப்பு, ஆற்றல் மற்றும் புதுமைகள் கொண்டதாக இருக்கும்.

ஜெனிஸிஸ் பிராண்ட்டுடன் தயாரிக்கபடும் கார்கள் சர்வதேச சந்தைகளை மையபடுத்தி உருவாக்கப்படும். இது குறிப்பாக சொகுசு கார் சந்தையை மையபடுத்தி தயாரிக்கபட உள்ளது.

இந்த பிராண்டின் கீழ், லக்சுரி செடான்கள், சலூன்கள், கூபே-க்கள் மற்றும் எஸ்யூவிக்களும் உருவாக்கப்பட உள்ளது.

இந்தியாவே பிரதான சந்தை;

இந்தியாவே பிரதான சந்தை;

தற்போதைய நிலையில், ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவை மிக முக்கிய சந்தையாக கருதுகிறது.

இந்தியாவில் சொகுசு கார்களின் சந்தை மிக வேகமாக விரிவடைந்து வருகிறது. எனினும், இந்திய சொகுசு வாகன சந்தையானது, மெர்சிடிஸ்-பென்ஸ், ஆடி, பிஎம்டபுள்யூ உள்ளிட்ட நிறுவனங்களின் ஆதிக்கத்தில் உள்ளது.

மெல்ல மெல்ல வால்வோ நிறுவனமும், இந்திய சொகுசு சந்தையில், அதன் தடத்தினை பதித்து வருகிறது.

உலக அளவில் போட்டி;

உலக அளவில் போட்டி;

ஹூண்டாயின் ஜெனிஸிஸ், மற்ற சர்வதேச பிராண்ட்களான அக்யூரா, கேடில்லாக், இன்ஃபினிட்டி, லெக்சஸ் மற்றும் லிங்கன் உள்ளிட்டவற்றிடம் இருந்து கடும் போட்டியை எதிர் கொள்ள வேண்டியதாக இருக்கும்.

ஜெனிஸிஸ் பிராண்டின் அடையாளம்;

ஜெனிஸிஸ் பிராண்டின் அடையாளம்;

ஜெனிஸிஸ் பிராண்டின் கீழ் தயாரிக்கப்படும் மாடல்கள், பிரஃபிக்ஸ் ‘G' (முன்னொட்டு - ‘G') உடனும், அதனையடுத்து, ஒரு எண்னுடன் பெயரிடப்பட்டு வெளியாக உள்ளது.

ஜெனிஸிஸ் என்ற வார்த்தைக்கு பொருள், துவக்கம் என்பதாகும்.

ஹூண்டாய் நிறுவனம் தங்களின் லக்சுரி பிராண்டுக்கு வைத்த இந்த ‘ஜெனிஸிஸ்' என்ற பெயர், அதற்கு மிக பொருத்தமாக உள்ளது.

முதல் அறிமுகம்;

முதல் அறிமுகம்;

ஜெனிஸிஸ் பிராண்டின் கீழ், முதல் சொகுசு கார், டிசம்பர் 2015-ல் அறிமுகபடுத்த பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வருங்கால திட்டங்கள்;

வருங்கால திட்டங்கள்;

ஜெனிஸிஸ் தங்களின் பிராண்டின் கீழ், 2020-ஆம் ஆண்டிற்குள், சுமார் 6 சொகுசு கார் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.

ஆரம்ப கட்டத்தில், இந்த ஜெனிஸிஸ் பிராண்ட் மூலம் தயாரிக்கபடும் கார்கள், ஹூண்டாயின் மற்ற தயாரிப்புகளுடனே சேர்த்து விற்கப்பட உள்ளது.

வருங்காலத்தில், ஜெனிஸிஸ் பிராண்ட்-க்கு என பிரத்யேக ஷோரூம்கள் நிறுவபட்டு, அவற்றின் மூலம் ஜெனிஸிஸ் பிராண்ட் தயாரிப்புகள் விற்கப்பட உள்ளது.

English summary
Hyundai launches the Genesis brand as an all-new global luxury brand to take on several competitors. The goal is to deliver human-centered luxury through an array of luxury models. Their very first luxury model will be launched during December 2015.
Story first published: Sunday, November 8, 2015, 8:29 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark