அனைத்து ஹூண்டாய் கார்களின் விலையும் உயர்கிறது
அனைத்து கார்களின் விலையையும் உயர்த்துகிறது ஹூண்டாய் மோட்டார்ஸ். வரும் ஆகஸ்ட் 1ந் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
உற்பத்தி செலவீனம் கணிசமாக உயர்ந்திருப்பதால், இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விர்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு மூத்த அதிகாரி ராகேஷ் வத்சவா கூறியுள்ளார்.

மாடலுக்கு தக்கவாறு அதிகபட்சமாக ரூ.30,000 வரை விலை உயர்வு இருக்கும் என்று ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்திருக்கிறது.
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து பிற கார் நிறுவனங்களும் விலை உயர்வு அறிவிப்பை கையிலெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








