சூப்பர் கார் தயாரிப்பில் இறங்க ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டம்!!

Posted By:

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் சூப்பர் கார் தயாரிப்பில் இறங்குவதற்கான திட்டம் குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில், தனது N என்ற பெயரிலான புதிய பெர்ஃபார்மென்ஸ் கார் பிராண்டை ஹூண்டாய் மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது.

அத்துடன், அதே ஆட்டோ ஷோவில் ஹூண்டாய் என் 2025 விஷன் என்ற கான்செப்ட் கார் மாடலையும் பார்வைக்கு வைத்தது. இந்த காரின் அடிப்படையில்தான் புதிய சூப்பர் காரை உருவாக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

புது 'பாஸ்'

புது 'பாஸ்'

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம் பெர்ஃபார்மென்ஸ் கார் தயாரிப்பு பிரிவின் தலைவராக இருந்த ஆல்பர்ட் பியர்மான்தான் தற்போது ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் என் பெர்ஃபார்மென்ஸ் கார் தயாரிப்பு பிரிவின் தலைவராகியுள்ளார். அவர் புதிய சூப்பர் கார் தயாரிப்பு திட்டம் குறித்த சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

சூப்பர் கார்

சூப்பர் கார்

ஹூண்டாய் என் 2025 விஷன் கான்செப்ட் அடிப்படையில் புதிய சூப்பர் காரை தயாரிப்பதற்கு திடடம் உள்ளது. ஆனால், அது உடனடியாக சந்தைக்கு வந்துவிடும் என்று கூற முடியாது. முதலில், வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான, ஓட்டுவதற்கு சிறந்த அனுபவத்தையும் தரும் பெர்ஃபார்மென்ஸ் கார்களை தயாரிக்க உள்ளோம். அந்த வரிசையில், அதிக செயல்திறன் கொண்ட மாடல் எதிர்காலத்தில் களமிறக்குவோம். ஆனால், அந்த இலக்கை தொடுவதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. நாங்கள் அந்த இலக்கை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம்," என்று கூறினார்.

 ரகம்

ரகம்

புதிய ஹூண்டாய் சூப்பர் கார் 2 கதவுகள் அமைப்புடைய கூபே சூப்பர் கார் மாடலாக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

ஹூண்டாய் ஜெனிசிஸ் காரில் பயன்படுத்தப்படும் 429 எச்பி பவரை அளிக்க வல்ல 5.0 லிட்டர் வி8 எஞ்சினை புதிய சூப்பர் காரிலும் பயன்படுத்த திட்டமிட்டிருக்கின்றனர்.

சர்வீஸ்

சர்வீஸ்

கார் விபரங்களை அளிக்கும் விபரக் குறிப்பு புத்தகத்திற்கு பதிலாக, ஓனர்ஸ் மேனுவலில் இருக்கும் தகவல்களுடன் கூடிய ஐ-பேட் சாதனத்தை வழங்க திட்டமிட்டுள்ளனர். அத்துடன், காரை குறித்த காலத்தில் சர்வீஸ் செய்து தருவதற்கான பேக்கேஜையும் ஹூண்டாய் வழங்கும்.

விலை மதிப்பு

விலை மதிப்பு

80,000 டாலர் முதல் ஒரு லட்சம் டாலர் வரையிலான விலைப்பட்டியலில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

 
English summary
Hyundai Motors Plans To Develop super car.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark