ஹூண்டாய் நிறுவனம் வழங்கும் நவராத்திரி சிறப்பு சலுகைகள் !

By Ravichandran

ஹூண்டாய் நிறுவனம் நவராத்திரி பண்டிகை கொண்டாட்டங்களை ஒட்டி பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. நாளை வரை ஹூண்டாய் கார்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் இந்த ஆஃபர்களை பெற்றுக் கொள்ளலாம்..

ஹூண்டாய் எலீட் ஐ20 ஹேட்ச்பேக், ஆக்டிவ் இ20 கிராஸ்ஓவர் மற்றும் க்ரெட்டா மாடல் கார்கள், இந்த ஆஃபர்களில் இருந்து விலக்கப்பட்டுள்ளது. இவற்றை தவிர, பிற அனைத்து ஹூண்டாய் நிறுவன தயாரிப்புகளும், நாடு முழுவதும் ஆஃபர்களுடன் கிடைக்கின்றது.

இந்த நவராத்திரி காலத்தில், வாடிக்கையாளர்கள் ஹூண்டாய் கார்களுக்கு 1,00,000 ரூபாய் வரையிலான சலுகைகளை பெற முடியும். இது தவிர, 22-ஆம் தேதி வரை வாங்கப்படும் ஹூண்டாய் நிறுவன கார்களுடன் 1,00,000 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள தங்கமும் வெல்ல வாய்ப்புகள் உள்ளது.

Hyundai Navratri Discounts To Last Till 22nd October

அதிகப்படியாக, ஹூண்டாய் சான்ட்டா ஃபீ கார்களுக்கு 1,00,000 ரூபாய் வரை சலுகைகள் கிடைக்கிறது. அடுத்தப்படியாக, எலண்ட்ரா செடான் கார்களுக்கு 90,000 ரூபாய் வரை சேமிப்புகள் கிடைக்க உள்ளது. வெர்னா கார்களின் மீது 83,000 ஆயிரம் வரை சலுகைகள் கிடைக்கும்.

எக்ஸ்சென்ட் மற்றும் கிராண்ட் ஐ10 மாடல் கார்களின் மீது 70,000 ரூபாய் வரை சேமிக்க முடியும். இந்த சலுகையானது, இந்த காம்பேட் செடான் மற்றும் ஹேட்ச்பேக் வகையிலான பெரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களில் கிடைக்கும்.

இந்தியாவில், ஐ10 ஹேட்ச்பேக் கார்கள் பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி எரிபொருள் வசதிகளுடன் கிடைக்கின்றது. இந்த இரு வேரியண்ட்களின் மீதும் 50,000 ரூபாய் சலுகைகள் கிடைக்கும்.

எக்ஸ்சேஞ்ஜ் போனஸ் மற்றும் ஃஜீரோ டவுன் பேமண்ட் வசதிகளுடன் 2,99,000 ரூபாய் விலையில், இயான் டி-லைட்+ ட்ரிம் காரை வாங்க ஹூண்டாய் நிறுவனம் வசதிகள் செய்துள்ளது.

பல்வேறு இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மக்களை கவர ஏராளமான ஆஃபர்களை வழங்குகின்றன. இந்த நவராத்திரி பண்டிகைகாலம் புதிய பொருட்களை வாங்க சிறந்த நேரம் என்பதால், வாடிக்கையாளர்களும் தங்களுக்கு பிடித்த பொருட்களையும், வாகனங்களையும் வாங்கி மகிழ்கின்றனர்.

Most Read Articles
English summary
Hyundai Navratri Discounts To Last Till 22nd October 2015. These offers and discounts will be available only on select few models of Hyundai Cars.
Story first published: Wednesday, October 21, 2015, 9:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X