அடுத்த ஆண்டு புதிய 7 சீட்டர் எம்பிவி... ஹூண்டாயின் ஆக்ஷன் ப்ளான்!!

Written By:

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் இருந்த காலி இடத்தை க்ரெட்டா எஸ்யூவி மூலம் நிரப்பி விட்டது ஹூண்டாய் மோட்டார்ஸ். அடுத்து தனது கவனத்தை காம்பேக்ட் எம்பிவி கார் மார்க்கெட் மீது திருப்பியுள்ளது.

இதற்காக, புத்தம் புதிய காம்பேக்ட் எம்பிவி கார் மாடலை உருவாக்குவதில் அந்த நிறுவனம் தீவிரமாக களமிறங்கியிருக்கிறது. மாருதி எர்டிகா, ரெனோ லாட்ஜி மற்றும் ஹோண்டா மொபிலியோ கார்களுக்கு போட்டியாக இந்த புதிய மாடல் இருக்கும். இந்த புதிய மாடலை அறிமுகம் செய்துவிட்டால், ஓரளவு அனைத்து செக்மென்ட்டுகளிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுவிட்ட திருப்தி அந்த நிறுவனத்துக்கு கிடைக்கும்.

பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

கடந்த 2012ம் ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹெக்ஸா ஸ்பேஸ் என்ற எம்பிவி கார் கான்செப்ட்டை ஹூண்டாய் காட்சிக்கு வைத்திருந்தது. ஆனால், அந்த கான்செப்ட்டை தயாரிப்புக்கு கொண்டு செல்வது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி களமிறக்கும் திட்டத்தை ஹூண்டாய் வெளியிட்டிருக்கிறது.

க்ரெட்டா அடிப்படையா?

க்ரெட்டா அடிப்படையா?

இந்த புதிய காம்பேக்ட் எம்பிவி காரை சமீபத்தில் விற்பனைக்கு வந்த க்ரெட்டா அடிப்படையில் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், க்ரெட்டா எஸ்யூவி ப்ளாட்ஃபார்மில் புதிய காம்பேக்ட் எம்பிவி வடிவமைக்கப்படும் வாய்ப்பு இல்லை. ஏனெனில், க்ரெட்டா எஸ்யூவியின் வடிவமைப்பு செலவீனத்தில் இந்த புதிய எம்பிவி காரை உருவாக்கினால், போட்டியாளர்களுக்கு சவாலான விலையில் களமிறக்க முடியாது என்று ஹூண்டாய் கருதுகிறது.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

ஹூண்டாய் வெர்னா காரில் இருக்கும் எஞ்சின் ஆப்ஷன்களை புதிய எம்பிவி காரில் ஹூண்டாய் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைவிட முக்கியமாக, இந்த புதிய எம்பிவி காரின் முக்கிய அம்சமாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலிலும் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது. இதன்மூலமாக, போட்டியாளர்களைவிட வாடிக்கையாளர்களிடம் தனது எம்பிவியை முன்னிலைப்படுத்தக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2017ம் ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய எம்பிவி காரை விற்பனைக்கு கொண்டு வரும் நோக்கில் ஹூண்டாய் திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறது. இந்த கார் கிராண்ட் ஐ10 காரின் பாகங்களை பகிர்ந்து கொள்ளும் என்ற தகவலும், இந்த காரை சவாலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரும் முஸ்தீபுடன் ஹூண்டாய் செயல்பட்டு வருவதை உணர முடிகிறது.

கொசுறுத் தகவல்

கொசுறுத் தகவல்

புதிய க்ரெட்டா எஸ்யூவி கொஞ்சம் காஸ்ட்லியான பிரிமியம் தயாரிப்பாக மனதில் பட்டுவிட்டது. எனவே, 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட ஒரு புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்தும் திட்டமும் ஹூண்டாயிடம் உள்ளது. உடனடியாக இல்லையென்றாலும், எதிர்காலத்தில் இந்த புதிய மினி எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வருவது குறித்த பேச்சு அடிபட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

 
English summary
Hyundai plans to launch new MPV car by next year.
Story first published: Thursday, July 23, 2015, 10:49 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos