விரைவில் வருகிறது மாருதி ஸ்விஃப்ட் ஹைபிரிட்: முக்கியத் தகவல்கள்!

இந்த ஆண்டிலேயே மாருதி ஸ்விஃப்ட் காரின் ஹைபிரிட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹைபிரிட் மாடல்களுக்கான மைலேஜ் கணக்கீடுகளின்படி, சாதாரண மாடலைவிட விட இருமடங்கு கூடுதல் மைலேஜ் தரும் என்று வெளியானத் தகவல்களால், இந்த கார் மீதான ஆவலை அதிகப்படுத்தியுள்ளது. இந்த கார் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை ஸ்லைடரில் வழங்கியுள்ளோம்.

அரசு மானியம்

அரசு மானியம்

கடந்த மத்திய பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பை ஊக்குவிப்பதற்கான FAME's ( Faster Adoption and Manufacturing of Electric Vehicles) மானியத் திட்டத்தின் கீழ், 4 மீட்டருக்கும் குறைவான கார்களுக்கு ரூ.13,000 முதல் ரூ.1.24 லட்சம் வரை மானியம் பெற முடியும். எனவே, இந்த காருக்கு சரியான விலையில் வாடிக்கையாளர்கள் பெற இயலும். மேலும், இதுவே இந்தியாவின் மிக குறைவான விலை கொண்ட ஹைபிரிட் காராகவும் வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

உறுதிப்படுத்தும் முயற்சிகள்

உறுதிப்படுத்தும் முயற்சிகள்

சர்வதேச பசுமை வாகன கண்காட்சியில் இந்த ஸ்விஃப்ட் எக்ஸ்டென்டர் என்ற பெயரில் இந்த ஹைபிரிட் மாடலை மாருதி காட்சிக்கு வைத்திருந்தது. அத்துடன், கடந்த 5ந் தேதி சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நடந்த வாகன அணிவகுப்பிலும் இந்த ஸ்விஃப்ட் ஹைபிரிட் கார்களும் பங்கெடுத்தன. எனவே, இந்த காரை விரைவாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் திட்டம் மாருதியிடம் உள்ளது.

முன்னோடி திட்டம்

முன்னோடி திட்டம்

தற்போது அரசு துறைக்கான பயன்பாட்டில் இந்த ஸ்விஃப்ட் எக்ஸ்டென்டர் கார்கள் சோதனை அடிப்படையில் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. மேலும், முதல் லாட்டில் விற்பனை செய்யப்பட இருக்கும் கார்கள் டெல்லி மாநில அரசுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் செயல்பாடுகளை பொறுத்தே அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை மாருதி கையெிலெடுக்க உள்ளது.

டிசைன்

டிசைன்

வெளிப்புற டிசைனில் அதிக மாற்றங்கள் இருக்காது. அதேநேரத்தில், உட்புற வடிவமைப்பில் தற்போதைய மாடலுக்கும், இந்த ஹைபிரிட் மாடலுக்கும் அதிக வித்தியாசங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் 1,020 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.

எஞ்சின் மற்றும் மின் மோட்டார்

எஞ்சின் மற்றும் மின் மோட்டார்

மாருதி ஸ்விஃப்ட் காரின் இரட்டை எரிபொருள் நுட்பம் கொண்ட மாடலில் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டாரில் இயங்கும். இந்த காரில் மூன்று சிலிண்டர் கொண்ட 658சிசி பெட்ரோல் எஞ்சினும், 55kW திறன் கொண்ட மின் மோட்டாரும் பொருத்தப்பட்டிருக்கும். இவை இரண்டும் சேர்த்து அதிகபட்சமாக 73 பிஎஸ் பவரை அளிக்கும்.

மூன்று டிரைவிங் ஆப்ஷன்

மூன்று டிரைவிங் ஆப்ஷன்

இந்த கார் மூன்றுவிதமான ஓட்டுதல் தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும். சீரிஸ் மோட் என்ற முறையில் இயங்கும்போது பெட்ரோல் எஞ்சினில் மட்டுமே கார் செல்லும். பேரலல் மோடில் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் இரண்டும் இணைந்து செயலாற்றும். எலக்ட்ரிக் மோடில் மின் மோட்டாரில் மட்டுமே இயங்கும்.

ரேஞ்ச் மற்றும் சார்ஜ் நேரம்

ரேஞ்ச் மற்றும் சார்ஜ் நேரம்

இந்த காரை மின் மோட்டாரில் மட்டும் பயன்படுத்தி 25.5 கிமீ தூரம் பயணிக்க முடியும். எனவே, தினசரி அலுவலகம் செல்வோர்க்கும் மிக குறைவான எரிபொருள் செலவீனம் கொண்ட கார் மாடலாக இருக்கும். மேலும், 200V சாக்கெட் மூலமாக 90 நிமிடங்களில் இந்த காரில் இருக்கும் 5kWh லித்தியம் அயான் பேட்டரியை சார்ஜ் செய்துவிட முடியுமாம்.

மைலேஜ்

மைலேஜ்

ஹைபிரிட் மாடல்களுக்கான கணக்கீடுகளின்படி, இந்த கார் லிட்டருக்கு 48.2 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. சாதாரண ஸ்விஃப்ட் காரைவிட இந்த கார் 130 கிலோ கூடுதல் எடை கொண்டதாக இருக்கும்.

உதிரிபாகங்கள் இறக்குமதி

உதிரிபாகங்கள் இறக்குமதி

இந்த காருக்கான முக்கிய உதிரிபாகங்களான லித்தியம் அயான் பேட்டரி, மின் மோட்டார் உள்ளிட்ட பல முக்கிய பாகங்கள் ஜப்பான் மற்றும் இதர நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும்.

டிசையரும் உண்டு

டிசையரும் உண்டு

இதே தொழில்நுட்பத்துடன் டிசையர் காம்பேக்ட் செடானையும் அறிமுகம் செய்யவும் மாருதி திட்டமிட்டிருக்கிறதாம். அதுதவிர, மாருதி ஈக்கோ காரின் மின்சார மாடலையும் அறிமுகம் செய்யும் திட்டம் மாருதி வசம் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 24, 2015, 14:00 [IST]
English summary
India’s largest car maker Maruti Suzuki is set to launch a hybrid version of either its premium hatchback Swift or Dzire, the compact sedan based on it, later this year, which will give Indians the first taste of a plug-in hybrid car in the country.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+