பழைய மாருதி 800 காரை இவ்வாறு மாற்றுவதற்கு சில லட்சங்கள் மட்டுமே!!

Written By:

கார் மாடிஃபிகேஷன் செய்வதில் இளைஞர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. ஆனால், சிலவேளைகளில், கார் மாடிபிகேஷன் செய்யும்போது, ஒரிஜினல் காரே தேவலாம் என்ற நிலை ஏற்பட்டு விடும்.

இந்த நிலையில், பழைய மாருதி 800 காரை டெல்லியை சேர்ந்த டிசைன் நிறுவனம் ஒன்று மிக நேர்த்தியான கன்வெர்ட்டிபிள் காராக மாற்றி அசத்தியிருக்கிறது. அந்த காரின் படங்கள், கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 கஸ்டமைஸ் நிறுவனம்

கஸ்டமைஸ் நிறுவனம்

டெல்லியை சேர்ந்த ஜெகஜீத் சிங் என்பவரின் ஜேஎஸ் டிசைன்ஸ் நிறுவனம்தான் இந்த காரை மாற்றி அசத்தியிருக்கிறது.

மாடல்

மாடல்

2006 முதல் 2008 வரையிலான நல்ல கண்டிஷனில் உள்ள மாருதி 800 காரை கொடுத்தால் இவ்வாறு மாற்றித் தருவதாக ஜேஎஸ் டிசைன்ஸ் தெரிவித்துள்ளது.

கன்வெர்ட்டிபிள்

கன்வெர்ட்டிபிள்

மாருதி 800 காரை முழுவதுமாக புதிய வடிவில் மாற்றித் தருகிறது ஜேஎஸ் டிசைன்ஸ். அதாவது, மாருதி 800 காரின் உருவம் மொத்தமாக மறைந்து ஓர் ஸ்போர்ட்ஸ் கார் தோற்றத்திற்கு அழகாக மாறிவிடுகிறது.

பாடி பேனல்கள்

பாடி பேனல்கள்

முற்றிலும் புதிய பாடி பேனல்கள் பொருத்தியிருக்கின்றனர். இதனால், மாருதி 800 காரின் உருவம் எங்கும் தென்படவில்லை.

 டிசைன்

டிசைன்

முன்பக்கத்தில் ஃபியட் பாலியோ காரின் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இரட்டை கதவுகள் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் போன்று மாற்றப்பட்டிருக்கிறது. கருப்பு நிற அலாய் வீல், செவர்லே ஸ்பார்க் காரின் டெயில் லைட் போன்றவை அழகாக இருக்கின்றன. அத்துடன் மடக்கி வைக்கும் வசதியுடன் கூடிய கருப்பு நிற கூரை உள்ளது.

பிரத்யேக வண்ணம்

பிரத்யேக வண்ணம்

இந்த கார் முற்றிலும் மஞ்சள் வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கிறது.

உட்புறம்

உட்புறம்

உட்புறத்தை பொறுத்தவரையிலும் அதிக மாற்றங்களை செய்துள்ளனர். நிசான் டெரானோவின் ஏசி வென்ட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மீட்டர் கன்சோல், ஸ்டீயரிங் வீல் அசத்தலாக இருக்கிறது. அத்துடன், மஞ்சள் நிற ஃபினிஷிங், கருப்பு நிற டேஷ்போர்டு, மீட்டர் கன்சோல் பகுதி தனித்து தெரியும் வகையில் மஞ்சள் நிற ஃபினிஷிங் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

எல்சிடி திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இருக்கைகள்

இருக்கைகள்

ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதும் இந்த காருக்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

கட்டணம்

கட்டணம்

பழைய மாருதி காரை கொடுத்தால் ரூ.3.5 லட்சம் கட்டணத்தில் இதுபோன்று மாற்றித் தருவதாக ஜேஎஸ் டிசைன்ஸ் தெரிவித்துள்ளது.

காத்திருப்பு காலம்

காத்திருப்பு காலம்

இதுபோன்று மாறுதல்களை செய்வதற்கு 3 மாத காலம் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு...

தொடர்புக்கு...

டெல்லி மற்றும் சுற்றுப்பகுதியில் இருக்கும் எமது வாசகர்கள் இந்த கார் மாடிஃபிகேஷன் குறித்த கூடுதல் தகவல்களை பெறுவதற்கு 9811220071 என்ற மொபைல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Improved Version of modified Maruti 800.
Story first published: Monday, August 3, 2015, 10:45 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark