ஹோண்டா பிஆர்- வி காம்பேக்ட் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியானது
அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் ஹோண்டா கார் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.
ஹோண்டா பிஆர்- வி[BR- V] என்று அழைக்கப்படும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி, இந்தோனேஷியாவில் நடைபெற இருக்கும் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் தருவாயில், இந்த படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரியோ அடிப்படை
பிரியோ அடிப்படையிலான எஸ்யூவி மாடலாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், க்ரில் அமைப்பு ஹோண்டா சிட்டி காரை நினைவூட்டுவதாகவும், பக்கவாட்டின் பாடி லைன்கள் மொபிலியோ எம்பிவி காரை நினைவூட்டும் விதத்தில் இருக்கின்றன. தாய்லாந்து மற்றும் இந்தோனேஷிய ஹோண்டா கார் நிறுவனத்தின் வடிவமைப்பு நிபுணர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

ஆச்சரியம்
ஹோண்டாவின் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி 7 இருக்கைகள் கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதாவது, மூன்று வரிசை இருக்கை அமைப்புடையதாக இருக்கும். இதனால், இந்த எஸ்யூவி மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.

எஞ்சின் ஆப்ஷன்
இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். தவிரவும், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலிலும் எதிர்பார்க்கலாம்.

இன்டிரியர்
இந்த காம்பேக்ட் எஸ்யூவியில் தரமான பாகங்களுடன் கூடிய இன்டிரியர் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. ஹோண்டா சிட்டியில் இடம்பெற்றிருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இதிலும் பயன்படுத்தப்படும் என்பது ஸ்பை படங்கள் மூலமாக புலனாகிறது. இதுதவிர, புளுடூத் தொடர்பு வசதி, டச்ஸ்கிரீன், டியூவல் டோன் இன்டிரியர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

அறிமுகம்
ஆசிய மார்க்கெட்டுகளை குறிவைத்து இந்த எஸ்யூவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த புதிய எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்கள்
ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய மாடல்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும். ஆனால், இது 7 சீட்டர் மாடலாக இருக்கும் என்ற தகவலும், அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், போட்டியாளர்களைவிட நிச்சயம் கூடுதல் கவனத்தை பெறும்.


Click it and Unblock the Notifications








