இந்தியாவுக்கான மாருதி சுஸுகி எஸ் கிராஸ் அறிமுகம்... அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது?

By Saravana

மலேசியாவில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இந்தியாவுக்கான சுஸுகி எஸ் கிராஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

அடுத்த மாதமே இந்தியாவில் இந்த புதிய கார் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால், வாடிக்கையாளர் மத்தியில் பேராவல் எழுந்துள்ளது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

காம்பேக்ட் எஸ்யூவி

காம்பேக்ட் எஸ்யூவி

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் இந்த எஸ் கிராஸ் காருடன் மாருதி சுஸுகி களமிறங்க உள்ளது. இந்த க்ராஸ்ஓவர் வகை கார் மாடல் 4,300மிமீ நீளமும், 1,765மிமீ அகலமும், 1,580மிமீ உயரமும் கொண்டது.

கிரவுண்ட் கிளியரன்ஸ்

கிரவுண்ட் கிளியரன்ஸ்

வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் மாடல் 170மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கிறது. ஆனால், இந்தியாவுக்கான மாடலின் கிரவுண்ட் கிளியரன்ஸ் சற்று கூடுதலாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 டர்னிங் ரேடியஸ்

டர்னிங் ரேடியஸ்

இந்த காரின் டர்னிங் ரேடியஸ் 5.2 மீட்டர். மேலும், இந்த காரில் 430 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் இருக்கும். இரண்டாவது வரிசை இருக்கையை மடக்கினால், 1,269 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ஸ்பேஸ் கிடைக்கும்.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

இந்த காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் ஃபியட் மல்டிஜெட் டீசல் எஞ்சின் கொண்ட மாடல்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷோரூம்களில் தரிசனம்

ஷோரூம்களில் தரிசனம்

வரும் வாரங்களில் இந்த காரை மாருதி ஷோரூம்களில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான விலைப்பட்டியலில் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, June 8, 2015, 16:32 [IST]
English summary
Maruti's upcoming crossover S Cross has been revealed at the International Indian Film Academy Awards held in Malaysia.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+