பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் ரிலீசான இந்தியா வரும் கார் மாடல்கள்!

By Saravana

ஜெர்மனியில் உள்ள பிராங்க்ஃபர்ட் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி, கார் நிறுவனங்களின் புதிய தயாரிப்புகளுக்கு மிக முக்கியமான தளமாக இருக்கிறது. இந்தநிலையில், கடந்த இரு வாரங்களாக ஆயிரக்கணக்கான பார்வையளர்களாலும், ஆட்டோமொபைல் துறையினர் மற்றும் பத்திரிக்கையாளர்களால் திமிலோகப்பட்ட பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோ நேற்று நிறைவுற்றது.

உலகின் முன்னணி கார் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய மற்றும் கான்செப்ட் கார் மாடல்களை அறிமுகம் செய்தன. அதில், அங்கு அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களில் இந்தியா வரும் மாடல்களை பொறுக்கி எடுத்து இந்த செய்தித் தொகுப்பில் வழங்கியிருக்கிறோம்.

01. மிட்சிபிஷி பஜேரோ ஸ்போர்ட்

01. மிட்சிபிஷி பஜேரோ ஸ்போர்ட்

மூன்றாம் தலைமுறை மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் மாடல் பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோ வந்த பார்வையாளர்களை தனது கம்பீரத்தால் கவர்ந்தது. இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய மாடலில் புதிய 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் இடம்பெற்றிருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2017ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய மாடல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே வருவது குறிப்பிடத்தக்கது. புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர், புதிய ஃபோர்டு எண்டெவர் கார்களுடன் இந்த புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி போட்டி போடும்.

 02. லம்போர்கினி ஹூராகென் ஸ்பைடர்

02. லம்போர்கினி ஹூராகென் ஸ்பைடர்

இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்ட லம்போர்கினி ஹூராகென் சூப்பர் காரின் கன்வெர்ட்டிபிள் மாடல்தான் இது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியா வர இருக்கிறது. இந்திய சூப்பர் கார் பிரியர்களுக்கு இந்த புதிய கன்வெர்ட்டிபிள் சூப்பர் கார் ஓர் புதிய பயண அனுபவத்தை வழங்கும்.

03. ஃபோக்ஸ்வேகன் டிகுவான்

03. ஃபோக்ஸ்வேகன் டிகுவான்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய டிகுவான் எஸ்யூவியும் பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் பார்வையாளர்களை கவர்ந்தது. அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் இந்த புதிய எஸ்யூவி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவியில் பெட்ரோல், டீசல் மாடல்களில் 8 விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. ஆனால், இந்தியாவில் 187 பிஎச்பி பவரை அளிக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாக அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

04. புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1

04. புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1

பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோ மூலமாக, இரண்டாம் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மாடல் சர்வதேச பிரவேசம் மேற்கொண்டிருக்கிறது. இது ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக மாறியிருக்கிறது. தவிரவும், அதிக இடவசதி, நவீன தொழில்நுட்பங்கள், சிறந்த கையாளுமை கொண்ட காராக மேம்பட்டிருக்கிறது. இந்தியா வரும் மாடல்களின் பட்டியலில் இந்த சொகுசு எஸ்யூவியும் இடம்பெற்றிருக்கிறது.

05. ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ

05. ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ

கடந்த ஆண்டு பாரீஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ தற்போது பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவிலும் தரிசனம் தந்தது. அதிசக்திவாய்ந்த ஹேட்ச்பேக் கார் மாடலான இதில், 1.8 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக 192 பிஎஸ் பவரை அளிக்க வல்ல இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

06. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி

06. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி

தற்போது விற்பனையில் இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்கே மாடலுக்கு மாற்றாக வருகிறது. முதல்முறையாக வலது பக்க டிரைவிங் கொண்ட நாடுகளில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.

07. 2016 ஆடி ஏ4

07. 2016 ஆடி ஏ4

பல்வேறு புதிய சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டிருக்கும் ஐந்தாம் தலைமுறை ஆடி ஏ4 சொகுசு செடான் கார் பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த இரு மாதங்களில் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய கார், அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

08. ஜாகுவார் எஃப் பேஸ்

08. ஜாகுவார் எஃப் பேஸ்

ஜாகுவார் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி மாடல் என்ற பெருமையுடன் பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் பார்வையாளர்களை கவர்ந்தது. அடுத்த சில மாதங்களில் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜாகுவார் எக்ஸ்இ சொகுசு செடான் காருக்கு அடுத்து இந்த புதிய சொகுசு எஸ்யூவி மாடலை ஜாகுவார் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

09. பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்

09. பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்

சிறிய மாற்றங்கள், கூடுதல் சிறப்பம்சங்களுடன் மாற்றங்களை பெற்றிருக்கும் 2016 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மாடலும் பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. தோற்றத்தில் சிறிய மாறுதல்களை பெற்றிருக்கிறது. சில வேரியண்ட்டுகளில் ஹைபிரிட் சிஸ்டம் கொண்டதாக மாற்றம் கண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10. சுஸுகி பலேனோ

10. சுஸுகி பலேனோ

பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் தயாரிப்பு நிலை மாடலாக சுஸுகி பெலனோ அறிமுகம் செய்யப்பட்டது. மாருதி பிராண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார். பிராங்க்ஃபர்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டாலும், இந்தியாவில்தான் முதலில் விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்த மாதம் 26ந் தேதி இந்த புதிய கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. மாருதி நிறுவனத்தின் நெக்ஸா பிரிமியம் ஷோரூம்கள் வழியாக விற்பனைக்கு கிடைக்கும்.

 11. புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்

11. புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்

கடந்த ஜூன் மாதம் தகவல்கள், படங்கள் வெளியிடப்பட்ட நிலையில், புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் புதிய தலைமுறை மாடல் பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் தரிசனம் தந்தது. உலகின் அதிசிறந்த சொகுசு கார் மாடல்களில் ஒன்றான பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் பல்வேறு விதத்திலும் மேம்பட்டிருக்கிறது. கார்பன் ஃபைபர் பாடி கட்டுமானம், சிறந்த எரிபொருள் சிக்கனம், குறைவான மாசு என்பதோடு, இடவசதி, தொழில்நுட்ப வசதிகளில் போட்டியாளர்களைவிட ஒரு படி முன்னே நிற்கிறது. அடுத்த ஆண்டு முதல் பாதியில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது.

 12. பென்ட்லீ பென்டைகா

12. பென்ட்லீ பென்டைகா

உலகின் அதிவேக எஸ்யூவி மாடல் என்ற பெருமைமிக்க பென்ட்லீ பென்டைகா சொகுசு எஸ்யூவி பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோ மூலமாக சர்வசேத தரிசனம் தந்தது. அடுத்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய மாடல் பார்வையாளர்களுக்கு தரிசனம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனைக்கு வரும் வாய்ப்புள்ளது. ரூ.2.5 கோடி விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
India Bound New Car Models From 2015 Frankfurt Auto Show.
Story first published: Monday, September 28, 2015, 12:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X