இங்கிலாந்தில், ஜாகுவார் லேண்ட்ரோவர் ஆலைக்கு சென்ற நரேந்திர மோடி

Written By:

இங்கிலாந்தில் உள்ள ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் கார் ஆலைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்றார்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுபாட்டில் உள்ள ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவன ஆலையை மோடி பார்வையிட்டார். இந்த உற்பத்தி ஆலை, இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லேண்ட் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

நரேந்திர மோடியுடன், டாடா குரூப் சேர்மேன் சைரஸ் மிஸ்திரி, ஜாகுவார் லேண்ட்ரோவர் சீஈஓ ரால்ஃப் ஸ்பெத் மற்றும் வார்விக் மேனுஃபேக்சரிங் குரூப்பின் லார்ட் குமார் பட்டாச்சார்யா ஆகியோரும் உடன் இருந்தனர்.

ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம், ஒரு வருடத்திற்கு 4,25,000 கார்களை உற்பத்தி செய்கிறது. டாடா நிறுவனத்தின் வேறு எந்த உற்பத்தி ஆலைகளில் இருக்கும் பணியாளர்களை காட்டிலும், இந்த ஆலையில் அதிகமான பணியாளர்கள் பணி புரிகின்றனர்.

மேலும், டாடா குரூப்பால், இங்கிலாந்தில் செய்யப்பட்டுள்ள முதலீடு தான், வேறு எந்த நிறுவனத்தை காட்டிலும், மிக அதிகமான தொகையில் செய்யபட்டுள்ள மூதலீடு என்பது குறிப்பிடதக்கது.

நரேந்திர மோடி, இங்கிலாந்தில் மூன்று முழு நாட்கள் மேற்கொண்ட பயணத்தின் போது, பல்வேறு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளையும், அரசியல் தலைவர்களையும் சந்தித்து உறையாடியுள்ளார்.

நரேந்திர மோடி, மேற்கொண்ட பயணத்தின் போது, அவரை ஜாகுவார் எக்ஸ்ஈ ஸ்போர்ட்ஸ் சலூன் கார் மூலம் இந்த ஆலை சுற்றி காண்பிக்கபட்டது.

தற்போதைய நிலையில், ஜாகுவார் எக்ஸ்ஈ ஸ்போர்ட்ஸ் சலூன் கார் இந்தியாவில் விற்பனைக்கு கிடைப்பதில்லை. இந்த மாடல் தற்போது, இந்தியாவிற்கு இறக்குமதி செய்யபட்டுள்ளது.

ஜாகுவார் எக்ஸ்ஈ ஸ்போர்ட்ஸ் சலூன் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட உள்ளது. இது ஆரம்ப கட்டதில், சிபியூ அல்லது கம்ப்லீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுமையாக தயாரித்து முடிக்கபட்ட காராக அறிமுகம் செய்ய டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வரும் காலங்களில், இந்த ஜாகுவார் எக்ஸ்ஈ ஸ்போர்ட்ஸ் சலூன் காருக்கு எழும் தேவைகளை கருத்தில் கொண்டு இதனை இங்கேயே இந்தியாவில் தயாரிப்பது குறித்து பின்னர் முடிவு செய்ய உள்ளதாக தெரிகிறது.

English summary
Prime Minister of India, Narendra Modi visited the JLR manufacturing facility in the UK, which is currently owned by Tata Motors. Narendra Modi was accompanied by Cyrus Mistry - Tata Group Chairman, Ralf Speth - CEO - Jaguar Land Rover and Lord Kumar Bhattacharyya - Founder - Warwick Manufacturing Group.
Story first published: Tuesday, November 17, 2015, 9:32 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos